பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விந்தன்

அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் ஒருநாள் இரவு மாடி அறையில் தனியாகப் படுத்துக் கொண்டிருந்த என்னை அவர் யாருக்கும் தெரியாமல் வந்து கட்டிப் பிடிக்க, நான் திடுக்கிட்டு விழிக்க, அவர் தன் மேல் துண்டால் முகத்தை மறைத்துக் கொண்டு ஒட, அன்றிலிருந்து அவரைத் தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் நானும், என்னைத் தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் அவரும் திணற, பெங்களுர் வாழ்க்கையே என்னைப் பொறுத்தவரை ரஸாபாஸ்மாகப் போய்விட்டது.

ஊமை கண்ட கனவுபோல் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை, என்னால் எப்படிச் சொல்ல முடியும், என்னவென்று சொல்ல முடியும்? சொன்னால் மாமாவைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அல்லது, என்னைப் பற்றித்தான் என்ன நினைப்பார்கள்? $

அவரை மணந்து கொண்டிருக்கும் அக்காவுக்கு இன்றல்ல, என்றுமே துரோகம் செய்ய விரும்பவில்லை. நான். இது எனக்குத் தெரியும்; என் மனத்துக்குத் தெரியும். ஆனால் அது அவளுக்குத் தெரியுமா, அவளுடைய மனத்துக்குத் தெரியுமா? - அதிலும் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கு மட்டுமே ‘நீலி என்ற பட்டத்தைச் சமூகம் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்போது?

அதற்காக இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கென்று அவம் வாங்கிக் கொடுத்த ஆடையணிகளை இன்னும் எத்தனை நாட்கள் தரித்துக் கொண்டிருப்பது நான்? எனக்கென்று அவர் வாங்கிக் கொடுத்த நகை நட்டுக்களை இன்னும் எத்தனை நாட்கள் அணிந்து கொண்டிருப்பது நான் என் தன்மான உணர்ச்சி என்னை வதைக்கிறதே? உடனே அவற்றை அவிழ்த்து எறி; உடனே அவற்றை கழற்றி எறி!’ என்று அது என்னை உந்தி உந்தித் தள்ளுகிறதே?