பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 95

வணக்கம்; வருகிறேன்!” என்று இரு கைகளையும் ஓங்கி அடித்துக் கும்பிட்டு விட்டு ஒடியே வந்து விட்டானாம்.

இதை அவன் சொன்னதும் என்னுடையக் கவலைகளை யெல்லாம் மறந்து நான் விழுந்து விழுந்துச் சிரித்தேன். ஆனால் அவனோ, “சிரிக்காதே!’ என்று தன் அடித்தொண்டையிலிருந்து கத்தினான், அளவு கடந்த ஆத்திரத்துடன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; ‘என்ன அண்ணா, என்ன?’ என்றேன் திடுக்கிட்டு.

‘சிரிக்க வேண்டிய விஷயமா, இது? து’ என்று காரித் துப்ப வேண்டிய விஷயமல்லவா, இது? - இந்தப் பத்திரிகையைத் தான் என் அருமைத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்களாம் நறுமணம், லட்சக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்களாம்! இதே பத்திரிகை தான் தமிழையும், தமிழ்மக்களையும் . ஏன், இந்த தமிழ் நாட்டையுமே காப்பாற்றப் போகிறதாம் - பண்பு மிக்க என் பைந்தமிழ் நாடே, உனக்கா இந்த கதி?” என்று அடிமேல் அடியாகத் தன் ஆத்திரம் தீரும் வரை அடிவயிற்றில் அடித்துக் கொண்டான் அவன்!

இதற்கே இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படும் இவனிடம் மாமாவின் அசட்டுத் தனத்தைப் பற்றிச் சொல்லி யிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதை நினைக்கவே பயமாயிருந்தது எனக்கு.

<> <> <>

ஆனானப்பட்ட ஏசுநாதராலும் புத்த பிரானாலும் ஏன், காந்தி மகானாலும் கூடச் சீர்திருத்திவிட முடியாத இந்த உலகத்தை, அதன் மக்களை என் அண்ணாவா சீர்திருத்தி விடப் போகிறான்? - எனக்கு நம்பிக்கை