இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதிப்பேறி வாழ்க!
அடக்கம் உடையன் அறநெறி போற்றி நடக்கும் இயல்புடையன் நல்லன் - படைப்பாளன் வாணிக்குத் தம்பி மலர்க்கவியில் தோய்தும்பி
மாணிக்கம் பண்பன் மனம்.
நெஞ்சம் கவர்ந்துள் நிலைத்து மனத்தன்பு விஞ்சுமெனை அண்ணனென மேற்கொண்டான் - வஞ்சமிலான் கல்லாடப் பேருடையான் கல்விதனில் வல்லார்கள் - சொல்லாடிக் கொண்டிருப்பர் சூழ்ந்து. . . .
கவிகள் அருந்திக் களிப்புக்குள் மூழ்கிக் குவியும் மனமுடையாேர் கூடும் - புவிதான் - புதுச்சேரி, ஆங்குப் புகழ்மிகுக்க வந்தான் மதிப்பேறி வாழ்க மகிழ்ந்து.
சிெக்குத் தம்பி - கவிஞர் வாணிதாசனார் தம்பி
-
-