பக்கம்:மனிதர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1он களைத் தேடிப் போனான். இந்த பட்டிக்காட்டிலே இருந் தால், உருப்பட முடியாதுன்னு சொல்லிப்போட்டு, ரயி லேறிட்டான்... எங்கே போறதுக்கோ?

பட்டணத்துக்குதான். வேறே எங்கே? கிராமங்களி லிருந்து மண் வாசனையோடு பாட்டெழுதும் திறமை பெற்றவங்க பட்டணம் போயி பிரமாதமா வளர்ந்திருக் காங்கன்னும் நம்ம ஃபிரண்டு சொல்லி வச்சாரே, அதை புலவர் மறப்பானா? கையிலே காசு இல்லாம ரயிலேறியும், லாரியிலே இடம் புடிச்சும், பட்டணம் வந்து சேர்ந்த சில பேரு பணமும் புகழும் சுகபோக வாழ்க்கையும் பெற முடிஞ் சிருக்குன்னு பத்திரிகை குறிப்புகளிலே அவனும் படிச்சிருந் தானே! இவன் கையிலே ஆயிரத்துச் சொச்சம் ரூபா வேறே இருந்ததே? பின்னே ஏன் உயர முடியாது? அவன் மனம் இப்படித்தான் வேலை செஞ்சிருக்கணும். போயிட்டான்!”

அப்புறம்?

நாமறியோம் பராபரமேதான்!” என்றார் ராமய்யா.

ந என்ன ஆனானோ பாவம்' என்று சொக்கலிங்கம் அனுதாபப்பட்டார். அவன் எப்ப போனான்?’ போயி ரெண்டு வருசம் ஆகுது.அவன் என்ன வேணும் னாலும்ஆகியிருக்கலாம். பணத்தை பறிகொடுத்திருக்கலாம். எத்தன் எவன் கூடவாவது சேர்ந்து பணத்தை காலி பண்ணியிருக்கலாம். சோத்துக்குத் திண்டாடி, பிச்சைக் காரன் ஆகியிருக்கலாம். கூலிவேலை செய்யப் போயிருக்க லாம். ஒட்டல் எதிலாவது வேலைக்கு சேர்ந்திருக்கலாம். சீக்கிலே விழுந்து ஆஸ்பத்திரியிலே சேர்ந்து என்னவாவது ஆகியிருக்கலாம். ஆக்ஸிடெண்டிலே அடிபட்டிருக்கலாம் to-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/103&oldid=855430" இலிருந்து மீள்விக்கப்பட்டது