பக்கம்:மனிதர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மனமூட்டம் வானம் இருண்டு விட்டது... இருளோ சமுத்திரமோ என்று, சூலுண்ட மேகங்கள் திரண்டு கவிந்து கனத்துத் தொங்குவதனாலே, எங்கும் ருங்கும் என்றாகி விட்டது. இப்போது மணி நான்கு பத்துதான். ஆனாலும் ஆறு ஆறரை மணி இருக்கும் என்று மயங்க வைக்கிறது சூழ்நிலை, இதுபோன்ற நேரங்களிலே என் மனம் சிறகுகளை ஒடுக்கிக்கொண்டு பொந்தினுள் ஒண்டிக்கொள்கிற சிறு பறவை ஆகிவிடுகிறது. இனம் புரியாத ஒரு குழப்பம்காரணமற்ற ஒரு சோகம்- உள்ளத்தில் குறுகுறுக்கிறது. படுக்கையில் குப்புற விழுந்து விம்மி விம்மி அழ வேண்டும் போல் தோன்றுகிறது... - மணலுக்குள் புதைக்கப் புதைக்க முண்டியடித்துத் தலைதுாக்கி வெளியே வந்து குடுகுடு என ஒடுகிற கருவண்டு போல, உள்ளத்தில் புதையுண்டு கிடந்த நினைவுகள் சம்பந்தம் இல்லாமல்-தேவை இல்லாமல்-மேலெழுந்து படர்கின்றன. என்றோ நிகழ்ந்தனவும், எப்பவோ எங்கோ கண்டனவும், இது போன்ற சமயங்களில் ஏனோ நிழ லாட்டம் போடுகின்றன. கறுப்பு அங்கி போட்டுத் தலைமுதல் கால்வரை மூடிக் கொண்டு, பூச்சாண்டி போல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் கோஷாக் கிழவி ஒருத்தி குபுக்கென்று முளைக்கிறாள், பள்ளம் பள்ளமாய் கோடுகள் கீறிய முகமும், கோணிய உதடுகளும், பொடி தேய்த்துக் கறுப்பேறிய விகாரப் பற் களும் காட்டி அவள் பரிதாபமாகச் சிரிப்பது கோரமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/105&oldid=855433" இலிருந்து மீள்விக்கப்பட்டது