பக்கம்:மனிதர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (; ; களும் மழையில் குளித்தவாறு வீடு திரும்பினோம். நடன க வேண்டிய தூரமோ நெடுந்தொலை துணையற்ற வழி நெஞ்சிலே பயம். நான் எங்க வீட்டுக்குத் தலைப்பிள்ளை. இடி தலைச்சன் தலையைத் தேடிவந்து விழுமாமே? என்று ஒருவன் பயந்து எங்கள் பயத்தையும் அதிகப்படுத்தினான். அர்ச்சுனன் பேரைச் சொல்லு, அர்ச்சுனா, பார்த்தா, காண்டீபா...' என்று முனு முணுத்தான் இன்னொருவன். என் தம்பி அர்ச்சுனன் பேர் பத்து, அர்ச்சுனன் பேர் பத்து' என்று புலம்பிக் கொண்டு வந்தான். பாதி தூரம்தான் வந்திருப்போம். சட்டுச் சடசடத்துக் கொட்டி முழக்கிய இடி தடால் என்று விழுந்தது. மின்னல் ஒளி வெள்ளமாய்ப் பாய்ந்தது. ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டு ஒடி னார்கள் சிறுவர்கள். இடி எங்கோ விமுத்திருக்கிறது என்று புரிந்தது. ஊருக்கு மேற்கேயுள்ள மாதா கோயிலின் ஊசிக் கோபுரத்தில் இடி விழுந்து சிறிது சேதம் ஏற்பட்ட விஷயம் மறுநாள் தெரிய வந்தது. பயத்தாலும் குளிராலும் நடுங்கிக்கொண்டு நானும் தம்பியும் வீடு சேர்ந்தபோது இரவில் வெகுநேரம் ஆகியிருக்கும் என்று தோன்றியது. சூடான காப்பியும் சுடச்சுட தோசையும் கிடைத்தால் நல்லது என்று மனம் ஆசைப்பட்டது, வயிறு கேட்டது. ஆனால்...சூடாக சுடச்சுட, முதுகிலே கிடைத்தது-அடி மேல் அடி, எங்கள் அம்ம பத்திரகாளி ஆக மாறி, எங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தாள், ஏ. சின்னச் சவங் களா! கரி முடிஞ்சு போற மூதிகளா! இந்த மழையிலே எங்கே தொலைஞ்சு போனிங்க? இப்ப ஏன் இப்படி சொட்டச் சொட்ட நனைஞ்சுக்கிட்டு வர்றீங்க?' என்று சொல்லுக்குச் சொல் அறை கொடுத்துத் தன் ஆங்கா ரத்தைத் தணித்துக் கொண்டாள். நாங்கள் அழுதோம்: குளிரும் பசியும் அறையின் சூடும் தந்த வேதனையால் குமுறிக் குமைந்து கண்ணிர் வடித்தோம். அப்போது மணி ஏழு தான். - அது இப்பொழுது பசுமையாய் நினைவில் பூத்து நிற். கிறது. வாழ்வின் கொடுமையும் கசப்பும் சூழலும் எழுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/107&oldid=855436" இலிருந்து மீள்விக்கப்பட்டது