பக்கம்:மனிதர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 தொண்டைக் குழியில் துயரம் அடைக்க, ஐயோ பாவம், ஐயோ பாவம்' என்று மனக்குரல் புலம்பக் கவனித்துக் கொண்டிருந்தேன். சில வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த அது இப்போதுதான் நடப்பதுபோல் பளிச்சிடுகிறது. மனிதனின் மரணத் தவிப்பை, உயிர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாத இயற்கையின் போக்கை, நினைத்து என் உள்ளம் கனக் கிறது. எனக்கு அழுகை முட்டி வருவது அதற்காகத்தானா? ஒருநாள் கடலோரத்தில் நின்றேன் ஒரு நண்பனுடன், மேகங்கள் கறுத்துப் புரண்டு நெடுகிலும் பரவி வந்தது வேடிக்கைக் காட்சியாக இருந்தது. இருண்டு, மழை இறங்கி விடும் போல் தோன்றியது. போகலாம், போய்விடலாம் என்று நண்பன் துடித்தான். பதட்டம் காட்டினான். மழை யில் நனைவது சுகமாக இருக்கும் என்று நான் நகரவில்லை. பலர் ஓடினார்கள். என்னை விட்டுவிட்டு ஒட அவனுக்கு மனம் வரவில்லை. பெரும் துாற்றல் விழுந்தது. நாமும் ஒடலாமே என்றான் அவன் பரிதாபகரமாக. மழை வலுத்தது, மண்ணை, மரங்களை, எங்களை நன்கு குளிப் பாட்டியது, அதை அவனால் அனுபவிக்க முடியவில்லை. என் போக்கை ரசிக்க இயலவில்லை. வரும்போதுதான் சலவைச் சட்டை போட்டு வந்தேன், வீணாப் போச்சு' சலவைச் சட்டை பாழாயிட்டுது' என்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அனுதாபத்துக்குரிய அவன் தோற்றம் ஏனோ என் நினைவில் எழுகிறது... இருண்டு, மேகம் கவிந்து கிடந்த ஒரு பொழுதிலே, மனிதர் எவருமற்ற வேளையில், காற்றுச் சீறிச் சுழன்று கொண்டிருந்தபோது, அலைகள் ஆரவாரித்துப் பொங்கி எழுந்து மோதிப் புரண்டு துரைக் குமிழ்களாய்ச் சிதறி நிலம் தடவி உள் வாங்கிக் கொண்டிருக்கையில், கடலி னுள்ளிருந்து ஒரு ஆமை- பென்னம் பெரியது-வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/109&oldid=855440" இலிருந்து மீள்விக்கப்பட்டது