பக்கம்:மனிதர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அகற்றுவதில் அவர் தேர்ந்தவர் என்ற பேச்சு சுற்று வட்டா ரத்தில் நிலவியது.இதுதான் இந்த உலகத்தை பீடித்துள்ள கெட்ட வியாதி. வெற்றிகரமாக வாழ்கிறவர்களைப் பார்த்துப் புழுங்கும் கரியைப் பூச முயலும் இது குறித்து * இன்டெலெக்சுவல்”கள் அலட்டிக்கொள்ளலாமா என்ன? இந்த விதமாக வக்கீல், பேராசிரியர், பத்திரிகை முதலாளி, நடிப்புக் கலைஞர், கதை வசன கர்த்தா, கீதைங் பிரசங்கி முதலிய ஒவ்வொருவரைப் பற்றியும் - ஞான தாகம் கொண்ட அறிவின் செல்வர்கள் பற்றித்தான்தனித்தனியே என்னென்னவோ சொல்லப்படுவது வழக்கம். எனினும் அவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். இதற்கெல்லாம் மேம்பட்டவர்கள் நாம். வீ ஆர் எபவ் ஆல் தீஸ் திங்ஸ்!’ என்பது அவர்கள் கோட்பாடு. இந்தக் கூட்டத்தில்சதானந்தம் சேரநேர்ந்தது. சந்தர்ப் பத்தின் விளையாட்டேதான். அவர் அறிவுப்பசி கொண்டவர்தான். ஆனால் செல்வர் அல்ல. உலகம் எனும் சர்வகலாசாலையில் வாழ்க்கை என்கிற புத்தகத்தை ஒயாது கவனித்துக் கற்று, அனுபவ ஞானம் பெறும் ஆசை கொண்டவர். ஆனால் வாழ்க் கையை வெற்றிகரமாகக் கழித்தோம் என்று பெருமையுடன் கூறும் நிலைபெறவில்லை அவர். அறிவொளி பெற விரும்பி அவர் நூல்களை படித்துக்கொண்டே இருந்தார். அதையே இன்பமாகக்கொண்டு விட்டதால் வேறுபலவித இன்பங்களை யும்பெற்ற நிறைவு அவருக்கு ஏற்படவழிஇல்லாதுபோயிற்று அவர்உள்ளம் உறங்கவில்லை. சிந்தனைசோம்பிக் கிடப் பதில்லை. அவர் தன்னை ஒரு இன்டெலக்சுவல்' என்று கருதுவதுமில்லை. உலகத்தை உணர, மனிதர்களைப் புரிந்து கொள்ள, விரும்புகிற மாணவன் என்றே எண்ணிச் செயல் புரிந்தார். உமக்கு நிறைய விஷயம் கிடைக்குமய்யா. நம்மோடு வாரும்!’ என்று அவரையும் அங்கே அழைத்து வந்து விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/11&oldid=855442" இலிருந்து மீள்விக்கப்பட்டது