பக்கம்:மனிதர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈置酸 போன்ற உருவம் பெற்றவர். பெரும் உடல் குறுந்தாடிச் சாமியார்-வாசலின் இரட்டைக் கதவுகளை மூடி அடைக்க முயல்கிறார். மோதும் காற்று அவரை உள்ளே தள்ளு கிறது. அவர் முழு பலத்தோடு போராடி, கதவுகளை ஒரு மாதிரியாக அடைத்துவிட்டபோது, வேகமாகச் சாடிய காற்று கதவுகளை வீசி அடித்து, அந்தத் தடி உடல் மனிதனை அப்பால் தள்ளி விடுகிறது. மழை வெறிகொண்டு கம்பிகளை உள்ளே வீசி அடித்துக் களிக்கிறது... நிகழ் காலத்திலே பிரத்யட்சமாய் நடப்பதுபோல் தோன்றுகிறது அந்தப் போராட்டக் காட்சி. - இயற்கையின் வெறிகொண்ட சன்னிதியில் மனிதன் செயல்திறன் இழந்து திணற நேர்வதை எண்ணவும் என் சோகம் மேலும் வலுப் பெறுகிறது. என் அழுகை பெருகு கிறது, - வாழத் தெரிந்தவர்கள் நடுவிலே-வாழத் துணிந் தவர்கள் மத்தியிலே-வாழ முடியாமல், பலரைப் போல் வாழ்வதற்குத் திராணி இல்லாமல், செயலூக்கத்தைக் கொன்றுவிடும் சோகத்தால் அலைக்கழிக்கப்படுகின்ற என்னைப் போன்ற அப்பாவிகளை எண்ணி அழுகிறேன். நான் ஒரு அழுகுணிச் சித்தன். இருட்டைப் போர்த்துக்கொண்டு இயற்கையும் அழு கிறது. ஏனோ? (1969)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/112&oldid=855448" இலிருந்து மீள்விக்கப்பட்டது