பக்கம்:மனிதர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தோல்வியில் வெற்றி யார் யாரோ எது எதற்காக வெல்லாமோ எழுது கிறார்கள்; எழுதுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். கதைஞர் ரத்னவேலு அப்படி எல்லாம் சொல்வதில்லை. ஆனாலும், அவர் காதலுக்காகத்தான் கதைகள் எழுது கிறார். அவருடைய கதைகளே இதை எக்காளமிட்டுச் சொல்லும். காதலினால் மானிடருக்கு இன்பம் உண்டாம், அது உண்டாம்-இது உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர் உலகத்திரே!” என்று ஒரு கவிஞன் புலம்பிவிட்டுப் போனானே, அதைப் பின்பற்றி நாமும் காதல் வளர்க்கக் கதைப் பணி புரிவோம் என்று ரத்னவேலு கருத்தில் கொண்டு எழுதி வருகிறார் போலும் என்று எண்ணு கிறவர்கள் ஏமாற்றம் அடையவே நேரிடும். காதல் ரசம் நனி சொட்டச் சொட்ட அவர் சிறுகதை நெடுங்கதை, குறுநாவல், முழுநீள நாவல், வருஷக் கணக்கில் வளர்ந்து கொண்டே போகும் தொடர் நவீனம் எல்லாம் எழுதுகிறார் என்பது உண்மை. காதல் மன்னன்’ என்ற பெயரை சினிமா உலகில் யாரோ பற்றிக்கொண் டிருப்பதனால்தான், ரத்ன வேலுவின் ரசிகமணிகள் அவ ருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுக்க முன்வரவில்லை என்பது சொல்லாமலே பெறப்பட வேண்டிய சங்கதி. இதிலிருந்து,அவருக்கு ரசிக மாணிக்கங்களும் ரசிக ரத்தினங் களும், வைர வைடுரியங்களும் மிக நிறைய நிறையவே இருக்கிறார்கள் என்பது ஊகித்துக்கொள்ளத்தக்கதாகும். அவருடைய ரசிக மாணிக்கங்கள் எட்ஸ்ட்ரா எட்ஸ்ட்ரா காதல் கதைகளை விழுந்து விழுந்து படிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/113&oldid=855450" இலிருந்து மீள்விக்கப்பட்டது