பக்கம்:மனிதர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I # 2 பண்பினர்; பிறகு சுவையான கனவுகளை வளர்க்கும் இயல் பினர். அப்புறம் அவருடைய காதல் படைப்புகளை எல்லாம் தொகுத்து பைண்டு செய்து வைத்துக்கொண்டு, தலை பனையாக்கி, இன்ப உலகில் சஞ்சரிக்கும் சுபாவம் உடைய வர்கள் என்பதை ர்த்தினவேலு நன்கறிவார். அவர்களை ஏமாற்றக் கூடாது என்றுதான் அவர் ஒன்றைஒன்று விஞ்சும் விதத்திலே காதல் கதை ஒவியங்களைச் சுவையோடு எழுதிக் கொண்டிருந்தார். இப்படி, எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் பராபரம்’ ஆகத் தம்மை மாற்றிக்கொண்டு, காதல் கதை அளர்க்கும் ரத்னவேலுவுக்கு வாழ்வில் ஒரு ஏமாற்றம் துணையாக இருந்து வந்தது. . . . கதைஞர் ரத்னவேலு காதலுக்காகக் கதைகள் எழுது கிறார் என்பதன் உள்ளுறை பொருள் சற்றே விளக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும். கதைகள் வகையறா விடாது எழுதிக்கொண்டே இருந்: தால் புகழ் வரும், பணம் கிடைத்தாலும் கிடைக்கும். பலரும் மதிப்பு வைத்து நம்மை பாராட்டுவார்கள். இப்படி ரொம்பக் காலம் எழுதிக்கொண்டே போனால் என்றைக் காவது எவராவது நிதி வசூலித்து நமக்குப் பொன் முடிப்பு’ வழங்குவார்கள். நாம் இருக்கும்போது மறந்து போனாலும் செத்த பின்னர் சிலை வைத்துக் கெளரவிப்பார்கள்இன்னோரன்ன எண்ணங்கள் எழுதுகிற சுப்பர்களின் மன ஆழத்தில் புரண்டு அவர்களைப் பாடாய் படுத்துகின்றன. இதே போல இன்னொரு ஆசைப்பற்றி கதை எழுதுவோ ரும் உளர். நம் எழுத்தில் மயங்கி, பலப்பல பெண்கள் நமக்குக் கடிதம் எழுதுவார்கள்; எத்தனையோபேர் நம்மைக் காதலிப்பார்கள்; ந மக்குக் காதலிகள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள் எனும் ஆசைதான் அது. இப்படி ஒரு ஆசை பற்றி அலைகழிக்கத் தொடங்கிய தனாலேதான் கதைஞர் ரத்னவேலு காதல் கதைகள் எழுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/114&oldid=855452" இலிருந்து மீள்விக்கப்பட்டது