பக்கம்:மனிதர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F 1 & ஆரம்பித்தார்; எழுதுகிறார்; இந்த நம்பிக்கையோடுதான் எழுதிக்கொண்டே இருக்கிறார். 3. ஏதேதோ எண்ணங்களோடும் நம்பிக்கைகளோடும் எழுதத் தொடங்கியவர்களுக்கெல்லாம் அவர்களுடைய எண்ணங்களில் நாலிலே ஒன்றிரண்டு பலித் திருக்கலாம்; அல்லது பலிக்காமல் போய் அவர்களை விரக்தியின் திரு உருவங்களாய் மாற்றி விட்டிருக்கலாம். ஆனால் ரத்ன வேலுவுக்கு ஏமாற்றம்தான் துணையிருந்தது. என்றாலும் அவர் நம்பிக்கையை இழந்து விடாமல் அற்புதமான காதல் படைப்புகளை உருவாக்கி வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைத்துக் சுொண்டிருந்தன. அவ்வப்போது ஒருசில பெண்களும் கடிதம் எழுதத்தான் செய்தார்கள். அவர் அவருடைய கதாநாங்கிகளைத் துன்பம் எனும் இரும்புச் சட்டியில் அதிகம் போட்டு வாட்டி வதக்கி, நெருக்கடியான கட்டங் கள் எனும் கடுகு உளுத்தம்பருப்பெல்லாம் போட்டுத் தாளித்துக்கொட்டி வைக்கிறார்; என்றாலும், கதை முடிவிலே எப்போதும் இன்பம்தான் என்ற ருசியை ஏற்படுத் திச் சுவை மிக்கதாகப் படைக்கும் ஆற்றல் அவரிடம் இருக் கிறது. இந்த ரீதியில் ஒரு ரசிகை எழுதியிருந்தாள் என்று ரத்னவேலு அடிக்கடி கூறி மகிழ்வது வழக்கம். சில பெண்மணிகளை அவர் நேராகச்சந்திக்க வாய்ப்புகள் கிட்டியது உண்டு. அதெல்லாம் ஒடும் மேகங்கள் மாதிரி, தோன்றி மறைந்த சிறு நிகழ்ச்சிகள்தான். அவர் வீதியோடு போய்க்கொண்டிருப்பார். அவரை அறிந்த நண்பர்கள் மனைவியோடு, அல்லது மகள்களோடு எதிர்ப்படுவார்கள். அவர்கள் இவரைத் தெரியுமோ? இவர்தான் பேமஸ் ரத்னவேலு அற்புதமான கதைகள், நாவல்கள் எல்லாம் எழுதியிருக்கிறாரே, அந்த கற்பனைக் களஞ்சியம் இவரே தான்' என்று எதையாவது தங்களோடு வரும் பெண்களிடம் சொல்லி வைப்பார்கள். அவ்வேளைகளில் அப்பெண்களின் முகத்தில் பிறக்கும் மலர்ச்சியையும், கண்களில் சுடரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/115&oldid=855454" இலிருந்து மீள்விக்கப்பட்டது