பக்கம்:மனிதர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘I 14 விசேஷ ஒளியையும் அவர் கண்டு மகிழத் தயங்குவதே யில்லை. சிலர் நாங்கள் படித்திருக்கிறோம். ஸார் எழுது கிற கதைகளை நான் படிக்காமல் விடுவதே கிடையாது. எத்தனையோ தொடர்கதைகளைச் சேர்த்து வைத்திருக் கிறேனே" என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவர் உள்ளத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கி நிறையும். இதற்குமேல், அவர் எதிர்பார்ப்பது அல்லது எதிர்ப் பாராதது எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர் எதிரே வருகிற பெண்களைப் பார்த்துப்பார்த்து, இவளைப்போல். அல்லது அவளைப்போல-எவள் எவளையோ போல எல் லாம்- தமது காதலி இருக்கலாம் என்று எண்ணுவதும் நிற்கவில்லை. எண்ணிக்கொண்டே இருந்தால் என்றாவது அந்த எண்ணம் எண்ணியவிதமே செயலாகப் பரிணமித்து விடும் என்ற நம்பிக்கை ரத்ன வேலுவுக்கு உண்டு. அது அவ்விதமே திகழ ஆரம்பித்துவிட்டது என்று அவர் மகிழ்ந்து போனார், அவர் பாதையில் சாந்தா குறுக்கிட்டபோது. ரத்னவேலுவுக்குப் புதிதாக அறிமுகமான ஒருவரின் மகள் சாந்தா, எஸ். எஸ். எல். சி. படித்து முடித்துவிட்டு, சோம்பேறியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. ரத்னவேலுக்கு அவள்ை அறிமுகப்படுத்திய தந்தை அவளுக்கு நிறைய புத்த கங்கள் கொடுத்து உதவும்படி நண்பரிடம் சிபாரிசு ஒசய்தார். ஆகா, அதுக்கென்ன!’ என்று தலையாட் டினார் கதைஞர், அதுமுதல் அவள் அடிக்கடி அவர் வீடு தேடி வரத்தொடங்கினாள். மணிக்கணக்கில் உட்கார்ந்து வம்பளப்பதில் உற்சாகம் கண்டாள். அவர் எழுதிய கதை களைப் பற்றியும், அவள் படித்த வேறு பல புத்தகங்கள் பற்றியும் அவள் தாராளமாக உரையாடினாள். சாந்தா கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவம் பெற். றிருந்தாள். சங்கோஜம் இல்லாமல் அவர் முன்னிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/116&oldid=855456" இலிருந்து மீள்விக்கப்பட்டது