பக்கம்:மனிதர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} H 6 மகா கவிஞ இருந்ததாக யாரும் இதுவரை கு றிப்பிடக் காணோம். நான் அந்தக் குறையைப் போக்குவதற்காகவே கவிதை எழுத ஆரம்பித்தேன்’ எள்றாள். பளா: பளா! வாழ்க நீ வெல்க!' என்று வாழ்த்தினார் கதைஞர். தொடர்ந்து சொன்னார். நல்லவேளை, நீ எனக்குப் போட்டியாக வரவில்லை. நீயும் கதை எழுது கிறேன், நாவல் எழுதுகிறேன் என்று கிளம்பிவிட்டால், என்பாடு ஆபத்தாகிவிடுமே!’ என்று. அவள் வசீகரப் புன்னகை பூத்து, அவரைநோக்கினாள். கவர்ச்சிகரமாக மை பூசப்பெற்றிருந்த அழகிய பெரிய கண் களின் பொல்லாத பார்வை அது. கிறங்கிப் போனார் கதைஞர். தமக்கு அவள்மீது காதல் பிறந்து வளர்ந்து வருகிறது எனும் உண்மையை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அதிலிருந்து அவர் சதா சாந்த ஈவை நினைப்பதிலும், அவள் தன்முன் இருக்கும் போது அவளையே பார்த்து, அவள் பேச்சைக் கேட்டு, சொக்கிக் கிடப்பதிலும் சுகானுபவம் பெற்றார். கவிதை உள்ளம் பெற்றிருந்த சாந்தாவுக்குக் கதைஞ ரான தம்மீது காதல் உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவேண்டும் வன்று தவியாய்த் தவித்தார். தமது உள்ளக் கிடக்கையை அவளிடம் வெளிப்படையாக அறி விக்கவோ தயக்கம். சங்கோஜமும் கூட. அவள் என்ன சொல்வாளோ, எப்படி நடந்து கொள்வாளோ என்ற குழப்பம் வேறு. ஆகவே, தமது ஆசையை அவளுக்குத் தெரியப் படுத்தாமலே-என்றாவது ஒருநாள் எப்படியாவது அதை அவளிடம் அறிவித்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டே காலத்தை ஏலத்தில்விட்டு வந்தார் ரத்னவேலு, இன்று சாத்தா வந்ததும் அவளிடம் சொல்லிவிட வேண்டியதுதான் என்று உறுதிகொண்டு காத்திருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/118&oldid=855460" இலிருந்து மீள்விக்கப்பட்டது