பக்கம்:மனிதர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩意? அவர். அன்று அவள் விசேஷமான ஒரு கவிதைபோல் வத்து சேர்ந்தாள்.அவள் தோற்றத்தில் வியப்படைந்து விழித்துக் கொண்டிருந்தார் அவர். அன்று அவள் என்றுமில்லாத சந்தோஷத்துடன் விளங்குவதாகத் தெரிந்தது. எதையோ எண்ணி எண்ணிக் குறுநகை பூத்தாள். ஏதோ ஒரு பாட்டை மென்குரலில் இழையவிட்டாள், அவரைப் பார்த்துச் சிரித்தாள். கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக்கொண் உாள். உள்ளத்தின் குதுாகலம் இப்படி மேனி முழுவதும் பொங்கி வழியும்படி, பொங்கிப் பொங்கி வழியும்படி, என்ன விசேஷம் நிகழ்ந்து விட்டது?’ என்று கேட்கத் துடித்தார் அவர். ஆயினும் தயங்கிக் கொண்டிருந்தார். அவள் அவர் முன்னே வந்து மேஜை மீது குனிந்து, முழங்கைகளை ஊன்றிக்கொண்டு அவரை உற்று நோக்கி னாள். ஒரு விஷயம்...' என்று தொடங்கினாள். ரத்னவேலுவின் மனம் இன்பச் சிறகு விரித்து இனிய கற்பனை வானில் மிதக்கலாயிற்று. அவளும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருக்கிறாளா? என்னிடம் எப்படிச் சொல்வது என்று கூச்சம் கொண்டிருந்தாளா? இன்று சொல்லி விடுவது என்று துணிந்து விட்டாள் போலும் என்ன அருமையான மன ஒற்றுமை! அவள் அர்த்தமில்லாமல் சிரித்தாள். ஸார் வந்து... நீங்க தவறாக எண்ணிவிடக் கூடாது... கலகலவென்று தயக்கமோ சங்கோஜமோ இல்லாமல் பேசிப் பழகும் சுபாவம் கொண்ட பெண்ணைக்கூட காதல் உணர்வு எவ்வளவு நாணம் உடையவளாக மாற்றிவிடு கிறது! அவர் உள்ளம் கிளுகிளுத்தது. ஊம்ங்?’ என்று அவள் முகத்திலேயே பார்வை பதித்தார். to-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/119&oldid=855462" இலிருந்து மீள்விக்கப்பட்டது