பக்கம்:மனிதர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 & அவர் பார்வையை எதிரேற்கத் திரானியற்றனவாய், அஞ்சனம் தோய்ந்த அழகு விழிகள் தாழ்ந்தன. அந்நிலை யில் அவளது நீளிமைகளின் அழகிலே சொக்கினார் கதைஞர், நமக்கு முந்தி, தன் அன்பை, ஆசையை, அவள் நம்மிடம் தெரிவிக்கப் போகிறாள் லன்று குதுரகவித்தது அவர் உள்ளம். .லார், ஒருவரை இங்கே வரச்சொல்லியிருக்கிறேன். வழியில் தற்செயலாய்ப் பார்த்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? நீங்கள் என் நல்ல நண்பர். இல்லியா? தப்பிதமா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று அவரை இங்கேயே வரச்சொல்லி விட்டேன்...' அவள் மடமடவென்து பேசினாள். அவருடைய உடலி லுள்-உள்ளத்திலோ எங்கோ-பல கோட்டைகள் இடிந்து பொல பொல வெனச் சரிவது போலிருந்தது அவருக்கு. திடீரென அளவிட இயலா அசதியும் பலவீனமும் அவர் மீது கவிந்து விட்டதுபோல் தோன்றியது. அவருள் ஊற்றெடுத் துப் பொங்கிய உவகைப் பெருக்கும் உணர்வுக் கிளுகிளுப்பும் சட்டென வற்றி மாய்ந்தன. அவர் மெளனச் சிலையாக உட்கார்ந்திருந்தார். அவர் நிலையைக் கவனிக்கும் நிலையில் இல்லை அவள். தனது குது கல ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தான். இங்கே தான் இருக்கியா' என்று கேட்டபடி வந்து சேர்ந்தான் ஒரு இளைஞன், புது வெயிலில் மினுமினுக்கும் இயற்கை அழகுகள் போல் ஒளிக் கவர்ச்சியோடு மிளிர்ந் தாள் சாத்தன. அவனை அவள் பார்த்த பார்வை; அதில் நீந்திய பொருள்; அவ்ஸ் கண்களில், முகத்தில், எழிலிட்ட காந்தச் சுடரொளி-எல்லாமே புதுமையாக இருந்தன ரத்னவேலுவுக்கு. f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/120&oldid=855466" இலிருந்து மீள்விக்கப்பட்டது