பக்கம்:மனிதர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 3 தம்மோடு பேசிப் பழகிய எத்தனை எத்தனையோ நாட்களில்-தம்முன் நின்று சிரித்து விளையாடி இன்ப உளறல்களாய்ச் சொற்கள் உதிர்த்துப் பொழுது போக்கிய கணக்கற்ற வேளைகளில்-ஒருநாள் ஒரு பொழுதேனும் அவ ளுடைய பார்வை இந்தவிதப் பொருள் பொதிந்து பாய்ந்த தில்லை; அவள் கருவிழிகள் இவ்வித இன்பக்கனலேற்று மிளிர்ந்ததில்லை; அவளே இத்தகைய எழிலோடு விளங்கிய தில்லை. அவளுடைய ஆசை, அன்பு, ஆர்வம் எல்லாம் அவள் பார்வையிலும் பேச்சிலும் செயல்களிலும் பிரதி பலித்துக் கொண்டிருந்தன. அவளுக்கு ஆனந்த உதயம். அவருக்கு ஆசையின், நம்பிக்கையின், அஸ்தமனம்தான். அவருடைய உணர்ச்சிகளை அவருள் அவரே கொன்று புதைத்து விட வேண்டியதுதான். அக உலகமும் புற உலக மும் இருண்டு விட்டதாக எண்ணினார் அவர், தன்னைத் தேடி வந்தவனோடு, உற்சாகப் பெருக் கோடும் மகிழ்ச்சித் துள்ளலோடும், கிளம்பினாள் சாந்தா. வரேன், ஸார்!’ என்று கூவிவிட்டு, திரும்பிப் பாராமலே நடந்தாள். ஏமாற்றம் நெஞ்சை அழுத்த, நெடுமூச்கெறிந்தார் ரத்னவேலு. சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம்தான். திடுமென்று விழித்தெழுந்தவர் போல் நிமிர்ந்து . கார்ந்தார் ரத்னவேலு. சந்தேகமில்லை; புதுச்சக்தி தோன்றும் என மந்திரம் போல் உச்சரித்தார். பேனாவை எடுத்தார். வேகமாக எழுதத் தொடங்கினார். காதல் தூங்குக. காதலி தொலைக. என் வாழ்க்கை ஆயில் இவை அஸ்தமித்துப் போனால் என்ன? அதற்காக நான் மனமிடிந்து போவதா? எனக்குக் கதைகள், நாவல்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/121&oldid=855468" இலிருந்து மீள்விக்கப்பட்டது