பக்கம்:மனிதர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. எங்கே சேர்க்குமோ? உள்ளத்தில் எண்ண அலைகள் மோதிக் கொண்டிருக்க அமைதி இழந்து தவித்த சதானந்தத்தை அன்றைய அனுப வங்கள் தீர்மானமாக ஒரு முடிவு எடுக்கும்படி துரண்டின. போதும் இந்த நகர வாழ்க்கை!" என்று பெறு மூச் செறிந்தார் அவர், சில மாதங்களாகவே அவருக்குப் பட்டனத்து வாழ்க்கை மீது வெறுப்பு வளர்ந்து வந்தது. -வீட்டை விட்டு வெளியே போனால், மனுசன் உருப்படி யாக வீடு திரும்ப முடியும் என்று நம்புவதற்கில்லை. தெரு வுக்குத் தெரு திடீர் விபத்துகள். ஒரு ரோடைக் கடந்து மறுபக்கம் போக வேண்டுமானால், பத்து பதினைந்து நிமிடங்கள் காத்து நிற்க வேண்டியிருக்கு. ஆட்டோக்களும் சைக்கிள்களும் மோட்டார் பைக்குகளும் கண்மூடித் தனமாக ஒடுகின்றன. நடந்து போறவங்கதான் கண்ணைத் திறந்து மிகுந்த விழிப்பு உணர்வுடன் போக வேண்டியிருக்கு, இப்படி அவர் மனம் குமைந்தது. - வரவர நகரம் நரகமாக வளர்ந்து கொண்டிருக்கு, ஏகப்பட்ட கும்பல், பரபரப்பு, நெருக்கடி... அசுத்தங்கள், அழுக்குகள், ஆரோக்கியக் குறைவுகள்... இவற்றுக்கு எல்லாம் மேலாக, எப்போது எங்கே என்ன வெடிக்கும், வசதிக் குறைவுகளையும் தொல்லைகளையும் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாத நிலைமைகள். அன்று அப்படித்தான் நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/123&oldid=855472" இலிருந்து மீள்விக்கப்பட்டது