பக்கம்:மனிதர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩2会 அரசியலும் அரசியல்வாதிகளும் அதிகமாகி, அமைதியான வாழ்வுக்கு ஊறு செய்வதாக சதானந்தம் கருதினார். கிராமங்களில் அமைதியும் ஆனந்தமும் நிலைபெற்றிருக்கும் என்று அவர் நினைத்தார். எனவே, ஒருநாள் அவர் ரயிலில் பயணமானார். உரிய இடத்துக்கு உரிய காலத்தில் போய் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையோடுதான் அவர் புறப்பட்டார். ஆனால், முக்கியமான ஒரு உரிமைப் போராட்டம் காரணமாக, ரயில்கள் மதுரை ஸ்டேஷனிலேயே நிறுத்தப் பட்டு விட்டன. மதுரைக்குத் தெற்கே ஒரு ரயிலும் போகாது என்ற உண்மை அங்கே போன பிறகுதான் அவ ருக்கும் அவரைப் போன்ற பயணிகளுக்கும் புரியவந்தது. மதுரையில் பிரயாணிகள் மிகுந்த சிரமங்களை அனு பவிக்க நேர்ந்தது. சதானந்தமும் தொல்லைகள் அனுபவித் தார். வெகுநேரம் காத்துக் கிடந்தார். கும்பலோடு கும்ப லாய் முண்டியடித்து, ஏதோ ஒரு பஸ்சில் இடம் பிடித்து எப்படியோ ஊர் போய்ச் சேர்ந்தார். அவருடைய ஊரான சிவபுரம் அமைதி தவழும் அழகான கிராமம், ஒரு நகரத்தின் அருகாமையில் இருந்தது. டவுன்பஸ் அடிக்கடி போய் வந்தது. ஆகவே கிராமத்தின் சுகங்கள் அலுத்துப் போகிறபோது- அல்லது, நகரத்தின் நாகரீக வாடை தேவைப்படுகிறபோது - சில காசுகள் செல வில் நகருக்குப்போய், பொழுது போக்கிவிட்டு, திரும்பி விடலாம். கிராமத்தில் பொதுவான குடிநீர் வசதி, மின்விளக்கு கள், பஞ்சாயத்து ரேடியோ எல்லாம் இருந்தன. சதானந்தம் திருப்தி அடைந்தார். ஆனால், அது அல்பாயுசு திருப்தி தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/126&oldid=855478" இலிருந்து மீள்விக்கப்பட்டது