பக்கம்:மனிதர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 சதானந்தம் சுற்றுப்புறப் பசுமைக் காட்சிகளை மட்டுமே கண்டார் என்று சொல்ல முடியாது. இதற்கு முன்னர் இப்படி அவர் நடந்து திரிந்த எத்தனை எத்தனையோ யாத்திரா மார்க்கங்களில் அவர் கண்டிருந்த, கேட்டிருந்த, வாழ்க்கைக் காட்சிகளில் அநேகம் இப்போது அவர் எண் ணத்தில் நிழலாடின. மனித வாழ்க்கை பசுமைகளும் இனிமைகளும் மட்டுமே கொண்டதல்ல; கோரங்களும் கொடுமைகளும் மலிந்ததுதான் என்பதை அவருக்கு சதா உணர்த்திக் கொண்டு வரும் உண்மைகள் அவை. காட்சிகள்... --பரபரப்பும் பகட்டும் பொய்மையும் போலித்த" மும், மேல் மினுமினுப்பும் மண்டிய நகரங்கள். மணிதம் குன்றிய மனிதாபிமானமே இல்லாத, மனிதர்கள். அவர்கள் செயல்முறைகள். -கிராமங்கள். உயிரியக்கம் குறைந்துபோன, வறுமை யும் நம்பிக்கை வறட்சியும் மலிந்த, சமூகங்சள், செயலூக்கம் அற்ற மனிதர்களின் சிறுமைப் போக்குகள். -நகரங்களிலும், கிராமங்களிலும் எங்கும் எப்போதும் உழைக்கிறவர்கள்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள்: வாழ்க்கையின் வெற்றி, சுக செளகரியங்கள், நாகரிக வசதி கள் என்றெல்லாம் பெரிதுபடுத்தப்படுகிற வேளையிலும்சூழ்நிலையிலும் என்னென்னவோ தொழில் செய்து எப்படி எப்படியோ நாளோட்டும் நெருக்கடி நிலை. -நாகரிகத்துக்கும் மனித குலத்துக்கும் அத்தியாவசியத் தேவைகளான சில தொழில்களைச் செய்ய நேரிடுகிறவர் கள் இன்று இழிவாகக் கருதப்படும் தன்மையே நீடிப்பது. அவர்கள் முழு வயிற்று சாப்பாடு கூடப் பெற முடியாத அவல நிலை. பிரயோசனமில்லாத இல்லாமல் தீராது" என்கிற அவசியம் எதுவுமற்ற தொழில்களில் ஈடுபடுகிற வர்கள் பணத்தில் புரண்டு படாடோபமாக உடுத்து அள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/15&oldid=855493" இலிருந்து மீள்விக்கப்பட்டது