பக்கம்:மனிதர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾密 புலம்பிக்கொண்டன. வசதி உள்ளவர்களின் இரக்கமற்ற தன்மை குறித்தும் பேச்சு எழுந்தது. நெல்லை வீட்டில் நிறைய இருப்பு வைத்துக்கொண்டு,கொள்ளை லாபத்துக்கு விற்றல் அவர் வயல்களில் உழைக்கிறவர்களுக்குக்கூட கட னுக்குஅரிசி கொடுக்க மனமில்லாமை,வியாதி என்று உதவிக் குப் பணம் கேட்டால் அதிகப்பற்று ஆகிவிட்டது. பணம் தர முடியாது’ என மறுத்தல், குழந்தை சாகக் கிடக்கிறது என்று முறையிட்டுப் பணம் கோரியபோது செத்தால் நல்லதுதானேடா. ஒரு எண்ணிக்கை குறையும். நீதான் வத வதன்னு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருக்கியே!. என்று பேசும் திமிர். இப்படிப் பலவிதப் புலப்பங்களோடு சாமியார்களுக்கு மரியாதை, கோயில்களுக்கு நிதி உதவி, தானதருமத் தாராளம் பற்றிய செய்திகளும் கலந்து jఖీఖి அவர்கள் அவ்வட்டாரத்து ஜனகர் திருமலையப்பர் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதும் சதானந்தத்துக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. அவர் உதடுகளில் சிறு சிரிப்பு நெளிந்து கொடுத்தது. -நடமாடும் கோயில்கள்’ ஆகும் மக்களுக்கு உதவு வதே நல்ல திருப்பணி என்று நம்பிச் செயல் புரிந்தவர்கள் வசித்து வந்த நாடு தான்.இது. வாடிய பயிர்தனைக் கண்ட போதெல்லாம் நான் உளம் நொந்து வாடினேன், ஏழைகள் துயர் கண்டு நெஞ்சு உருகினேன்’ என்று கூறிய வள்ள லாரும் ஆன்மீக வாதிதான். ஏழை எளியவர், நாட்டின் மக்களுக்கு எல்லாம் நல்வழி காட்ட உயர்ந்த சிந்தனை களை எடுத்துச் சொன்ன விவேகானந்தரும் ஆன்மீகவாதி. தான்...தாங்கள் உய்வுற மண்ணகத்து இன்பமெலாம் துகர்ந்து விண்ணகத்தை இங்கு நிலைபெறச் செய்வோம் என்று பெரும் பேச்சுப் பேசுகிற மதவாதிகள், சாமியார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/18&oldid=855499" இலிருந்து மீள்விக்கப்பட்டது