பக்கம்:மனிதர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & அவர் கண்கள் நட்சத்திரக் காட்டில் மேய்ந்து களித் தன. கிருஷ்ணபட்சத்து நிலவு நேரம் கழித்து ೯r பார்த்தது. அதன் பார்வையால் வானவீதி வெளிறித் தோன்றியது. அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் பளிச் சிட்டது: மரணம் பற்றி மனிதன் சதா எண்ணிக் கொண் டிருக்க வேண்டியதில்லை. மரணத்துக்குப் பிறகு என்ன என்பது குறித்து மனசை அலட்டிக் கொண்டு அமைதி இழக்க வேண்டியதும் இல்லை. வாழ்க்கையின் இயல்பான முடிவு அது, வாழ்க்கை என்பது வாழ்ந்தாகப்பட வேண்டிய ៩...o. ஒவ்வொரும் அனுபவித்தே தீரவேண்டிய உண்மை. அது மாயையோ, மயக்கு வித்தையோ அல்ல. அதை தனக்கு ஒரு தண்டனையாகவும், மற்றவர்களுக்கு சுமையாகவும் வேதனையாகவும் ஆக்கிக் கொண்டிருப்பதை விட, கூடியவரையில் பிறருக்கு நன்மைகள் புரிந்து தானும் நற்பலன் பெறுவதே அறிவுடைமை ஆகும்...” சிவிர்ப்புற எழுந்து உட்கார்ந்தார் சதானந்தம். அவ ருக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு விட்டது. இன்று புதிதாகப் பிறந்தோம் - இனி நல்வாழ்வு வாழ்வோம். மக்கள் மத்தி யில் பொது தலப் பணிபல புரிந்து!’ என்று தீர்மானத்தோடு எழுந்து நடக்கலானார். ஆற்றங்கரையை ஒட்டி, சிறிது தொலைவில், சிறுசிறு சுடரொளி மினுக்குவது தெரிந்தது. உழைப்பவர்கள் வசிக்கும் சிற்றுாராகத்தான் இருக்கும். அதை நோக்கி நடந் திார் அவர், சதானந்தத்தின் உள்ளத்தில் கவிந்து கனத்துக் கிடந்த குழப்பம் போயே போய்விட்டது: (1967)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/20&oldid=855503" இலிருந்து மீள்விக்கப்பட்டது