பக்கம்:மனிதர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żó செய்தார்கள். ஆனால், கந்தையா கவலைப்படுவானா? அவர்களுக்கு ஐயோ! அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவர்களே புரிந்து கொள்வதில்லை!" என்று: பெரிய ஞானி போல் சொல்லி ஒதுக்கிவிட்டான். - சபல மரம் கண்ட தச்சன்”, உருண்டு புரண்டு ஒடும் கல்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே, அந்த இனத்தில் சேர்க்கப்பட வேண்டியவன் கந்தையா. அவன் கடைசி அரையில் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. கடைகளில் வேலை, வக்கீல் குமாஸ்தா உத்தியோகம் என்று விதம் வித ான தொழில் முறைகளையும் தொட்டுப் பார்த்துவிட்டு, கம்மா இருப்பதே சுகம்' என்று உணர்ந்திருந்தான். அவனது விசாலப் பார்வையும் , கூட்டாளிகளின் உபதேச மும், நாகரீக நகர நடவடிக்கைகளும் சேர்ந்து அவனை தாடகக் கலை மீது அனுதாபமும் ஆர்வமும் கொள்ளத் துண்டின. அந்தப் பேட்டையின் சபா, இந்த வட்டாரத்தின் சடை, இன்னொரு பாக்கத்தின் கலைக்குழு என்று மூலைக்கு மூலை நாடகக் கலை வளர்ப்பு வேலைகள் தீவிரமாக நடை பெறுகிறது. நம்ம பேட்டை மட்டும் ஏன் துரங்கிக் கிடக் கணு ம்? நாமும் ஒரு கலைக் குழுவைத் துவக்குவோம்...” என்று கந்தையா நினைத்தான். “பள பளா அருமையான ஐடியா!' என்று அவ லுடைய நண்பர்கள் ஆரவாரமாக ஆமோதித்தார்கள், o 妾 } ੇ ஆகிவிட்டது. எப்போதும் அங்கே நாலைந்து பேர் கூடி விருந்து நாடகக் கதை பற்றியும், நடிகர் தேர்வு குறித்தும் சினிமா சான்ஸ் பற்றியும் மனம் போல் பேசி மகிழ்ந் தார்கள். - கந்தையாவுக்கு ஒரளவு வசதி இருந்தது, அவனுக்குச் சொந்தமான வீடுதான் அது. அதன் சில பகுதிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/22&oldid=855506" இலிருந்து மீள்விக்கப்பட்டது