பக்கம்:மனிதர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 வாடகைக்கு விட்டிருந்ததன் மூலம், மாதந்தோறும் பணம் வந்து கொண்டிருந்தது. மொட்டை மாடியில், தேவைக்கு வேண்டிய பந்தல்போட்டு, அதை நண்பர் கலைக்குழு"வின் நாடக ஒத்திகைகளுக்கு ஏற்ற இடமாக மாற்றிவிட்டான் அவன். ஒட்டல் தொழிலாளர்கள் பலர் நாடகங்கள் எழுதி, நடிக்கவும் முன்வந்து விடுகிறார்கள். அப்படியிருக்கையில் நாம் என்ன மட்டமா? நம்மால் நாடகம் எழுத முடியாதா? டைரெக்ட் செய்ய முடியாதா?’ என்று கந்தையா எண்ணி னான். துணிந்து செய் வாத்தியாரே!” என்று நண்பர்கள் துரபம் போட்டார்கள். கந்தையா எப்படியோ ஒரு நாடகம் எழுதிவிட்டான். எப்படியோ சில நூறு ரூபாய் சேர்த்தான். நாடக அரங் கேற்றத்திற்குத் தேதியும் குறித்து முடித்தான். ஆகவே, நண்பர் கலைக் குழு ஜாம் ஜாமென்று செயல் புரியத் தொடங்கியது. - நாடக ஆசிரியர் - இயக்குநர்' கந்தையாவுக்கு, நாடகக் க ைல ைய வளர்ப்பதற்காக ஈடுபட்டுள்ள சொஸைட்டி வண்ணப் பறவைகள்', ஃபாஷன் யுவதிகள்' எவரையும் தெரியாத காரணத்தினாலே, இந்த விதமான நாடகங்களையும், நாடகத் தயாரிப்பாளர்களையும் நம்பி வாழ்கிற இளம் பெண்களின் துணையை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானாச்சு வாத்தியாரே! இதுக்காகவே எத்தனையோ பேரு காத்திருக்காங்க. ஒரு நாடகத்துக்கு முப்பது குடா கொடுத்தால் போதும் என்று உதவி புரிய முன்வந்தான் முத்துசாமி. இவன் ஆர்மோனியஸ்ட்'டும் கூட. வெறும் முப்பது ரூபாதானா? ஒத்திகைகள், நாடகம் எல்லாத்துக்குமே?’ என்று ஆச்சர்யமாக விசாரித்தான் கந்தையா. 2 سED

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/23&oldid=855507" இலிருந்து மீள்விக்கப்பட்டது