பக்கம்:மனிதர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மனிதர்கள் சுகமான படுக்கையில் சோம்பலோடு உருண்டு புரளும் சொகுசுக்காரிபோல, கடலின் நீர்ப்பரப்பு புரண்டு கொண் டிருந்தது. வீறுகொண்டு பொங்கி எழுந்து வெறியோடு பாய்ந்து துரை சிதற வீழ்ந்து மடியும் பேரலைகள் இல்லை அந்த இடத்தில். எனினும், கடலின் அசைவுகள் பார்வைக்கு இனிய விம்முதல்களையும் வடிதல்களையும் உருவாக்கி, சிறுசிறு அலைகளை நடனமிடச் செய்து கொண்டிருந்தன. பெரும் அற்புதமாய், மகத்தான வலிமையின் சித்திர மாய், விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் மீது, மனித உழைப் பின்-ஆற்றலின்-மாண்பின் சின்னங்களின் ஒன்றேபோல், அசையாமல் நின்றது ஒரு கப்பல். வாணிபக் கப்பல். கொந்தளிக்கும், குமுறும், அலைமோதும் மா கடலின் மீது, இயற்கையின் வலிய சக்திகள்பேரில், மனிதன் அடைந் துள்ள வெற்றியை நிரூபிக்கும் உருவப் பிரமாணங்களில் ஒன்றாய் எங்கெங்கோ சென்று வந்துள்ள அது, இப்போது மெல்லென ஆடி அசையும் தொட்டிலில் நிம்மதியாய் துரங்கும் குழந்தை போல, அலட்சியமாய், அமைதியாய் நின்று கொண்டிருந்தது. பெரிய கோட்டை போன்ற அந்த அமைப்பிலிருந்து விலகி விலகி, வசீகரமான ஒரு பறவை மாதிரி, ஒய்யார மாக நீந்திக் கரை நோக்கி முன்னேறியது ஒரு லாஞ்ச், அந்தக் கப்பலை வேடிக்கையாகப் பார்க்க வந்து, பின் கரைக்குத் திரும்பும் குழுவினர், கரையிலிருந்து கப்பலுக்கு இக்கியமாக சில சாமான்களை எடுத்துச் சென்ற உழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/28&oldid=855517" இலிருந்து மீள்விக்கப்பட்டது