பக்கம்:மனிதர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாளிகள், லாஞ்சைச் சேர்ந்த சிலர் இப்படி பலதரப்பட்ட வர்கள் போனது போல் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு புதிதாகச் சேர்ந்திருந்தார்கள் கப்பலிலேயே வசித்துத் தொழில் புரியும் மாலுமிகள் ஐந்துபேர். ஏதோ புரியாத மொழி பேசும் அயல் நாட்டினர். அவர்கள் மற்றவர்களுக்கு விந்தையாய் கண்டு நகை யாடுவதற்கு ஏற்ற வேடிக்கை உருவங்களாகத்தான் தோற் றம் அளித்தனர். அவர்களது நிறமும், முக அமைப்பும், பேச்சும் செயல் முறைகளும் பிறரின் பார்வைக்கும் பேச்சுக் கும் ஊக்க மூட்டும் விஷயங்களாக இருந்தன. மேலே எல்லையற்று விரிந்துகிடந்த வானத்தையும், கற்றிலும் பரந்து வியாபித்திருந்த கடல் நீரையும், தங்கள் கப்பலின் உட்புறத்தையும், தங்களையும் மாத்திரமே வாரக் கணக்கில் கண்டு கண்டு அலுத்திருந்த அக் கட லோடிகள் மண்ணை மிதித்து, மனிதர்கள் மத்தியில் பழகக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்ததனால் உன்ரூற ஊற் றெடுத்துப் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளிலே திளைத்திருந்தார்கள். உள்ளத்திலே அரும்பி முகிழ்த்த நுண் உணர்வுகளின் மலர்ச்சி அவர்களது முகத்தில் சிலிர்த்துச் சிரித்தது. கரையையே நோக்கித் தாவிய அவர்களது குறுகலான பழுப்பு நிறக் கண்களில் மின்னலிட்டு ஒளிர்ந்தது. ஒருவனது குவிந்த உதடுகளினூடே இனிய சீட்டி"யாக ஒலி செய்தது; இன்னொருவனின் வாய் வழியே கனத்த குரல் பாட்டாக வெடித்தது. லாஞ்சின் மையப் பகுதி மேல் எழுந்து நின்று கைகளை இறக்கைபோல் ஆட்டிக் கொண்டு தனிநாட்டியம் பயின்ற ஒரு நெட்டையனின் கோமாளித்தனத்தில் குமிண் சிரிப்பாக வெளிச்சம் காட்டியது. தங்கள் சந்தோஷத்தின் இனிமையை அதிகப்படுத்த ஆசைப்பட்டவர் போல, ஒவ்வொருவரும் தத்தமது கால் சட்டைப் பைக்குள்ளிருந்து கை நிறைய மிட்டாய்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/29&oldid=855519" இலிருந்து மீள்விக்கப்பட்டது