பக்கம்:மனிதர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 3 & கூலி வேலை செய்கிறவர்களில் ஒருவன், உருண்டை முகமும் தடி உருவமும் பெற்றிருந்த மாலுமியிடம், எனக்கு ஒரு சிகரட் கொடு தொரே, சிகரெட்...சிகரெட் என்று சொற்களாலும், சாடைகளினாலும் தனது விருப்பத்தைத் தெரியப்படுத்தினான். - சொத்தை விழுந்து, கறுப்பேறிய பற்களைக் காட்டிய வாறே அவன் நோ, நோ சிகரெட்ஸ்' என்று சொல்லி, கை விரித்தான். ஏமாற்றம் அடைந்த கூலிக்காரன் பண்ணிப்பய! அவன் மூஞ்சியைப் பாரேன். அசல் பன்னிதான். இல்லேங் கிறான் தேவ்டியா மகன் என்று தனது ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டான். தொடர்ந்து பெருமையாக, நான் நாலு வச்சிருக்கேன். அப் புடிச்சது வேற. ஸ்டாக் பண்ணி கிட்டா அப்புறமாப் புடிக்கலாம். இல்லேன்னா டீக் கடைக் காரனிடம் கொடுத்தால் உயும் காசும் தருவான். அதுக்குத் தான் என்று பேசினான். அவன் ஏச்சையும் பேச்சையும் ரசித்துச் சிரித்தனர் பலர். இது என்ன பிச்சைக்காரப் புத்தி' என்று குமைந்தது. மணியின் உள்ளம். லாஞ்ச் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. கப்பலி லிருந்து கரைக்கு சுமார் எட்டு மைல் தூரம் போக வேண் டும். கரை ஒரத்தில் ஆழம் பற்றாது என்றுதொலைவிலேயே கப்பல்கள் நங்கூரமிடப் பெற்று நிற்பது வழக்கம். காற்று சிறிது வலுத்திருந்தது. அதனால் நீர்ப்பரப்பில் விம்முதல்களும் வடிதல்களும் உருவில் பெருத்திருந்தன. சிற்றலைகள்கூட அளவில் வலியதாகியிருந்தன. குஷியாக முன்னேறும் குதிரை மாதிரி லாஞ்ச் பாய்ந்து, உயர்ந்து தணிந்து, எவ்வி எவ்விச் சென்றது. அதன் வேகத்திலே பிளந்து புரண்ட நீர்ப்பகுதி சலாரிட்டு லாஞ்சில் மோதிச் சிதறித் தெறித்தது. அவ்வீச்சில் அலையாய் பொங்கியநீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/31&oldid=855525" இலிருந்து மீள்விக்கப்பட்டது