பக்கம்:மனிதர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

获 சிற்றத்தின் சிறு திவலைகள் லாஞ்சின் மேலே ஜாலியாக அமர்ந்திருந்தவர்களின் கால்களை நனைத்தன. வீடு இரும் பும் சூரியனுக்குப் பிரிவுபசாரம் கூறும் வானம் வண்ண வண்ணக் கலவைகளால் காட்சி விழா நடத்திக் கொண்டி ருந்தது . இவை எல்லாம் மணியின் உள்ளத்தில் உவகைக் கிளர்ச்சி உண்டாக்கின. இந்த இனிமைகளை ரசிப்பது சாத்தியமாகும் வகையில் உழைத்து வசதிகள் செய்துள்ள மனித சாதனைகளை எண்ணி வியந்தது அவன் மனம். கடலோடிகளில் ஒருவன் மணியின் நண்பரிடம் ஏதோ விசா ரித்தான். அவன் ஆங்கிலத்தில் தான் கேட்டான். ஆயினும் அவனுடைய ஆங்கிலமும், அதை அவன் உச்சரித்த விதமும் குழப்பமே தந்தன. எதுவும் விளங்கவில்லை. -உனக்கு ஏதாவது புரியுதா?’ என்று நண்பன் கேட் டான். -இல்லையே!” என்றான் மணி, மாலுமிகளுக்குப் புரியாது என்ற தைரியத்தில், அவர் களைப்பற்றி பச்சையாகவும் கொச்சையாகவும் வசவு களைக் கலந்து தமிழில் தாராள விமர்சனம் செய்து கொண் டிருந்த ஒருவன், இந்தக் காட்டு மாட்டுப் பயல்களிடம் பேசிப் பழகுறதுக்கே ஒரு நேக் வேணும். நான் பேசுறேன் பாருங்க" என்று முன்வந்தான். ஓட்டை உடைசல் இங்கி வீஷில் எப்படி எப்படியோ பேசினான். அவர்கள் கேட்க இவன் சொல்ல, இவன் விசாரிக்க அவர்கள் பேச என்று எவ்வாறோ உரையாடல் நிகழ்ந்தது. பிறகு அவன் மற்றவர்களிடம் சொன்னான்; அருமை யான வாட்ச் வச்சிருக்கானாம். யாருக்கும் வேணுமின்னாத் தருவானாம், விலைக்குத் தான். ஆனா விலை மலிவாத் தா னிருக்கும். கூலிங்கிளாஸ், பவுண்டன் பேனா எல்லாம் கிடைக்கும். எனக்கு ஒரு பேனா தாறேன்னு சொல்லியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/32&oldid=855527" இலிருந்து மீள்விக்கப்பட்டது