பக்கம்:மனிதர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விபரீத உணர்வுகள் ஆங், யாரது? உளறிக்கொண்டே திடுக்கிட்டுக் கண் விழித்தார் அன்னைவனம். அவர் பார்வை அங்டிமிங்கும் புரண்டு சுவர்களில் சாளரத்தில் கதவுகளில் எல்லாம் மோதி மேஜைக்கே திரும்பி வந்தது. விளக்கு எரிந்து கொண்டுதாணிருந்தது. கதவுகள் தாழிடப் பெற்றிருந்தன. அறைக்குள் யாரும் இல்லை, எவரும் வரவும் முடியாது. அப்போதுதான் அவர் உணர்வில் குத்தியது-படித்துக் கொண்டே யிருந்த நாம் நம்மை அறியாமலே துரங்கி விட்டோமே! விளக்கைக்கூட அணைக்காமல்:எழுந்து போப் படுக்கையில் படுக்காமல்! - குழிவான, உட்காருவதற்கும் சாய்வதற்கும் செளகரிய மான. பிரம்பு நாற்காலியில் அமர்ந்து படித்துக்கொண் டிருந்தார் புன்னைவனம், அசதியும் தூக்கமும் கிறக்கி விடவே அவர் தம்மை அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந் துள்ளார். ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது. யாரோ கூப்பிடுவதுபோல. அவர் காதருகில் வந்து தெளிவில்லாக் குரலில் என்னவோ கத்துவது போலும் கேட்டது. கேட்ட தாக ஒரு உணர்வு உறுத்தவேதான் அவர் திடுக்கிட்டார். கண் விழித்தார். கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு, முகத்தைத் துடைத்தபடியே அவர் நினைத்தார், சே, என்ன அசட்டுத் தனம்! இந்த அறைக்குள் இந்த வேளையில் யார் எப்படி வரமுடியும்?' என்று. மேஜைமீது, சுவரோரத்தின் மூலையில், நின்ற சிறு சிலையை அவர் கண்கள் குளுமையாய் தடவின. இளமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/35&oldid=855532" இலிருந்து மீள்விக்கப்பட்டது