பக்கம்:மனிதர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அவர் ரசிகர். கலையின் காதலர். அழகு நிறைந்த ஒவியங்களையும், அற்புதமான சித்திரங்களையும், நயம் மிகுந்த இலக்கியங்களையும் அனுபவித்து மகிழும் சுபாவம் அவருக்கு இருந்தது. நல்ல நல்ல புத்தகங்களை வாங்கிக் குவித்தது போலவே, சித்திரங்களையும் கலைப் படைப்பு களையும் வாங்கி, தமது வீட்டில் அணிபெற வைத்து, தினம் கண்டு கண்டு களிப்புற்றார். அவரும் அவரொத்த நண்பர் களும் கலைச் சிறப்புகள் உள்ள இடங்களுக்கு அடிக்கடி போய், அங்குள்ள பொக்கிஷங்களைக் கண்டு ரசித்து மகிழ் வதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு சென்றிருந்த உல்லாச உலா ஒன்றின்போது தான் இந்த சிங்காரச் சிலை அவர் கையில் சிக்கியது. சிற்றுார் ஒன்றிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருத்த காட்டுக் கோயிலில் அற்புதமான சிலைகள் இருக்கின்றன. என்று அறிந்த கலை அன்பர்கள் அங்கே போனார்கள். பழங்கால மன்னன் எவனோ கட்டுவித்த பெரிய கோயில்தான். அக்காலத்தில் ஒளியும் ஒலியும் பக்தியும் பாடலும், பூஜையும் ஆடலும் நிறைந்து ஜேஜே என் றிருந்திருக்கும். கால ஓட்டத்தில் அந்த இடம் தன் பெருமையை, உயர்வை, உயிரையே இழந்துவிட்டது. வெறுமையாய், வறண்ட சூழலாய், வெறும் கற்களாய், ஜீவனற்று சோபை குன்றி நின்றது கோயில். ஆயினும், அதனுள் தூண்களிலும் மண்டபக் கற்களிலும் விக்கிரகங் களிலும் கலை ஒளி குன்றாது, உணர்வுத் துடிப்புடன், விதம் விதமான உருவங்களில் வாழ்ந்து கொண்டிருந்தது, போனவர்கள் பார்த்தார்கள். வியந்தார்கள். ரசித் தார்கள். புகழ்ந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை, நல்ல கலை விருந்து அவர்களுக்கு. ஒவ்வொள்றையும் விடாது ஆராய்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/37&oldid=855537" இலிருந்து மீள்விக்கப்பட்டது