பக்கம்:மனிதர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 யொலி எழுப்ப, காலைத் தரைமீது எடுத்து வைத் து அசைவது போலவும் பட்டது. புன்னைவனம் மறுபடியும் திடுக்கிட்டு, நிமிர்ந்து உட் கார்ந்தார். சிலை சிலையாகத்தான் நின்றது. அதே குறும்புச் சிரிப்புடன்; விஷமப் பார்வையோடு. சே என் உணர்வுகள் என்னோடு கிச்சுக் கிச்சு விளை வாடுகின்றன!’ என்று அவர் நினைத்தார். எழுந்து அந்த அறையில் அப்படியும் இப்படியும் நடந்தார். மணி பதினொன்றுதான் ஆகியிருந்தது. ஏனோ அவர் ஆ, படுக்கையை நாடவில்லை. படுத்தாலும் துளக்கம் அர து என்றே தோன்றியது. படிக்கவும் பிடிக்கவில்லை. உள்ளத்தில் அலைமோதல்கள்-உணர்ச்சிகளின் கொதிப்பு. எண்ணங்களின் குறுகுறுப்பு. ஒரு ஜன்னல் அருகே நின்று வெளியே பார்வையை ஒடவிட்டார் அவர். ஆகா என்று சொக்கிப் போனார். வெளி உலகம் அசைவற்று, அமைதியுற்று ஆழ்துயில் பயின்று கொண்டிருந்தது. இயற்கை வெண்மய நிலவுப் போர்வையால் உலகைப் போர்த்தியிருந்தது. அவ்வொளிப் பூச்சு எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும் --மண்ணையும் மரங்களையும், கட்டிடங்களையும் வெறும் வெளியையும், அனைத்தையுமே-மோகனக் காட்சிகளாய் எடுத்துக் காட்டியது. அமைதி நிறைந்த அழகுமயமான இக் காட்சியைக் கண்டு ரசிக்க மனமில்லாமல்-வியந்து இன்புறத் தெரியாமல்-எல்லோரும் துரங்கிக் கிடக்கிறார் களே என்ற அனுதாப உணர்வு புன்னைவனத்திடம் பிறந்தது. இன்று பெளர்ணமி என்று சொன்னது அவர் அறிவு. அதுதான் நிலவின் செளந்தர்யம் இன்று இவ்வளவு அற்புத மாக இருக்கிறது என்று அவர் எண்ணிக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/40&oldid=855544" இலிருந்து மீள்விக்கப்பட்டது