பக்கம்:மனிதர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பால் ஒளி சித்திரிக்கும் பேரழகை நன்றாக ரசிக்கலாமே என்று ஆசை தூண்டியது. அவர் அறையின் விளக்கை அனைத்தார். உள்ளே இருள் கவிந்தது. வெளிப்புறத்தின் ஒளி வெள்ளம் பிரகாசமாய் உறுத்தியது. அதுவே குளுமை யாய், எழிலாய் மலர்ந்த அற்புதமாய் விளங்கியது. அந்த அமுத இனிமையில் அவர் தன்னை மறந்து நின்றார். இனம் கண்டு கொள்ளமுடியாத பூச்சிகளின் விதம் விதமான சத்தங்கள் விடாது ஒலித்துக் கொண்டிருந்தன. துரத்தில் ஒரு மரத்தில் ஆந்தை அலறியது. வெளவால் ஒன்று சிறகடித்துச் சுற்றிச்சுழன்று. ஜன்னல் பக்கமும் வந்து போனது. அறையினுள் வண்டோ, பறக்கும் பூச்சி எதுவோ சுவரில் மோதி, டக்கெனக் கீழே விழுந்தது. காகிதங்களினூடே கரப்பான் பூச்சி ஊர்வதுபோல் ஒசை எழுந்தது. அவர் முதுகை யாரோ தொட்டதுபோல், கழுத்தில் மூச்சுக் காற்று பட்டதுபோல், காதருகே கிசு கிசுத்ததுபோல் அவருக்கு உணர்வு உண்டாகவும், புன்னை வனம் அவசரமாகத் திரும்பிப் பார்த்தார். அவர் உடம்பு புல்லரித்தது. ரோமங்கள் சிலிர்த்தன. உள்ளே இருட்டுத்தான் அவர் கண்களைத் தாக்கியது. வெளி உலகின் ஒளிப்பிரவாகம் காரணமாக, அறைக்குள் இருட்டு கன்னக் கனிந்ததாய் கனத்துத் தொங்காமல் வெளிறியிருப்பதை அவர் உணர முடிந்தது. வேறு எதுவும் புலனாகவில்லை. சரி. நாற்காலியில் உட்காரலாம் என்று நடந்தார். அவர் முகத்தில் மென்மையான பட்டுத்துணி படிந்தது போலிருந்தது. ஒரு கணம் அவருக்கு எதுவுமே புலனாக வில்லை. சிறு மயக்கமும் தலைச்சுற்றலும் ஏற்படுவது போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு நாற்காலி யில் வந்து விழுந்தார். ஆமாம். விழுவதுபோல் தானிருந்தது அவர் உட்கார்ந்தது. மனம் விசித்திரமானது. உணர்ச்சிகள் விபரீதமானவை, இவை மனிதனை எப்படி எப்படி எல்லாமோ ஆட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/41&oldid=855546" இலிருந்து மீள்விக்கப்பட்டது