பக்கம்:மனிதர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒2 புன்னைவனம் எழுந்து அறைக்குள் உலாவ ஆரம்பித் தார். அவருள் ஒரு பீதி வேலை செய்தது. இது என்ன இழவுச் சிலையோ! மோகினி கிகினி என்றெல்லாம் சொன் னாங்க. விளையாட்டுப் போலே இதை எடுத்து வந்து விட்டோம். அப்பவே சிலபேர் சொன்னாங்க: இது மாதிரிச் சிலையை, அதிலும் காட்டுக்கோயிலில் கிடந்ததை, வீட் டிலே வைப்பது கூடாது. மந்திரம் மாயம் பேய் பிசாசு களிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். ஆனால் அறிவு பூர்வமாக, விஞ்ஞான ரீதியான சிந்தனை வழியாக, விளக்க முடியாத விபத்துக்களும் சம்பவங்களும் எத்தனையோ நடந்துள்ளன. இப்பவும் நடக்காமலில்லை! இப்படி எல்லாம் சொன்னாங்க. நாம்தான் சட்டை செய்ய வில்லை. யோசிக்கப் போனால், இந்தச் சிலை வந்ததி லிருந்து நமக்கு என்னென்னவோ நடந்து கொண்டு தானிருக்கு. அநேக சமயங்களில், உயிர் தப்பினதே தம்பிரான் புண்ணியம் என்கிற மாதிரி நெருக்கடியான கட்டங்கள் குறுக்கிட்டுள்ளன. நிதானமாக நினைத்துப் பார்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்ம கவ னத்தை இந்த அழகி மாதிரியான ஒரு உருவம் சுண்டி இழுத்ததும், அப்போ பார்த்து காரோ, மாடோ நெருங்கி வந்து விபத்துக்கு வழி வகுத்ததும் ஞாபகத்துக்கு வருது. இது கெட்ட சக்தி நிலைபெற்றுள்ள சிலைதான். இது வந்த திலிருந்து சரியானபடி தூக்கமுமில்லை. திடீர் திடீர்னு அழகான பொம்பிளை தட்டி எழுப்புகிறது போலவும், பக்கத்திலே நின்று சிரிப்பதுபோலவும் உருவெளித் தோற் றங்கள் என்னை பரிகசிக்கின்றன. எல்லாம் அந்தக் கெட்ட ஆவியின் வேலைதான். வேறு என்ன? அவர் மனம் நெளிந்து கொண்டிருந்தது. - s .

  1. };

ாகினி சிலையை நிலாவொளி இன்னும் அழகு படுத்திக் கொண்டுதான் இருந்தது. அதன் காந்தக் கவர்ச்சி அன்னைவனத்தின் உணர்வுகளைச் சுண்டி இழுத்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/44&oldid=855552" இலிருந்து மீள்விக்கப்பட்டது