பக்கம்:மனிதர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ శీ ஸ்விட்ச்சைப் போட்டு, லைட்டை ஏற்றிப் பார்த்தார் அவர். விளக்கொளியில் அந்த அறை மர்மமான அழகு ஒன்றை இழந்துவிட்டதாகவே தோன்றியது. சிலையும் தனிச் சிறப்பு எதுவுமில்லாத பழைய கல் உருவமாகத்தான் காட்சி தந்தது. - மணி பதினொன்றரைக்கு மேல் ஆகியிருந்தது. துரக்கம் வருதோ இல்லையோ, படுக்கையில் படுத்து விட வேண்டி யதுதான். கண்ணை மூடிக் கொண்டு கிடந்தால், துரக்கம் தானாக வந்துவிடும் என்று அவர் எண்ணினார். அவ்வாறே செய்தார். - விளக்கொளி அவிந்ததும், மறுபடியும் நிலவு தன்மாய வேலையைக் காட்டியது. அதில் குளித்து நின்ற சிலை அவரை ஆசை காட்டி அழைப்பது போலிருந்தது,

இந்த அழகி இங்கேயே இருந்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். நாளைக்கு முதல் காரியமாக இதை அப்புறப்படுத்த வேண்டும். பாழுங் கிணற்றித் போட்டுவிடலாம். அதுதான் சரி' என்று அவர் தீர்மானித்தார். -

அவரை அறியாமலே துரக்கம் அவரை ஆட்கொண்டு விட்டது. ஆனால் அதன் ஆட்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. துர் சொப்பனம் கண்டவர் போல் அவர் உளறினார். உடல் நெலிந்து புரண்டது. பிறரால் புரிந்துகொள்ள முடி யாத அவலக்குரல் எழுப்பியவாறே எழுத்து உட்கார்ந்தார். தேகத்தில் ஒரு படபடப்பு, காரணம்... அழகி அவரை நெருங்கி அவர் முகத்தில் முகம் பதித் தாள். பிறகு முகத்தைத் தாழ்த்தி அவர் கழுத்தில் முத்த மிட்டாள். அவள் உதடுகள் பதிந்த இடத்தில் குறுகுறுப்பு ஏற்பட்டது. அவள் அங்கு பல்லால் கடிப்பது போலிருந்தது. லேசாக வலித்தது. அங்கு சூடாக ரத்தம் பொங்கி வழிவது போல் தோன்றியது. அவள் சிரித்தாள், சிரிப்புதானா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/45&oldid=855554" இலிருந்து மீள்விக்கப்பட்டது