பக்கம்:மனிதர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

李 5 ஐயோ அம்மா’ என்று அவறிக்கொண்டு அவர் கீழே விழுந்தார். அவர் கைகள் மேஜையை பலமாகப் பற்றமுயன் றன. அம்முயற்சியில் மேஜை ஆட்டம் கொடுத்து சாய்ந்தது. அதன் மீதிருந்த சாமான்கள் பலவும் அவர் தலையிலேயே விழுந்தன. மோகினி சிலையும் உருண்டது. கீழே விழுந்து விட்ட புன்னைவனத்தின் தலைமீது, சரியான இடத்தில், பலமாக விழுந்தது. அது. அம்மா!' என்று முனகல் மட்டுமே அவரிட மிருந்து வந்தது. அப்போது இரவு மணி பன்னிரண்டு. ஒரு மரத்திலிருந்தி இரண்டு ஆந்தைகள் விகாரமாகக் கத்தின. புன்னைவனம் விழிக்கவே இல்லை. அவர் தலை அருகே உருண்டு விழுந்த சிலையின் முகம் அவர் கழுத்தில் பதிந்து விட்டது. மண்டையிலிருந்து பெருகி வழிந்த ரத்தம் அவ் வழியே வடிந்து அம் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது. (1968),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/47&oldid=855558" இலிருந்து மீள்விக்கப்பட்டது