பக்கம்:மனிதர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மனித பலம் கண்ணாடிப் பரப்பை உடைத்துத் துரள்துள்ளாக்கி வெறித்தனமாக அள்ளித்துரவுவது போல் வெண்துரை நுண் துளிகளைச் சிதறி, சடார் சடாரென மோதிப் புரண்டு கொண்டிருந்தன அலைகள். பசுமை நிற நீர்ப்பரப்பின் மீது விம்மல்கள் எழும். அவை உருண்டு திரண்டு உயர்ந்து தலை கூட்டும், படமெடுத்து எவ்வுகின்ற சர்ப்பம் போல. நீர்ச்சுவரென எழுகின்ற பகுதி முன்கவிந்து உள்வாங்கி, திடு மென ஆர்த்து வீழும், மலையருவி போலே. துரை அள்ளித் தெளித்து முன் பாய்ந்து கரையிலே மோதித் திரும்புகிற இறங்கு அலையோடு முட்டி ஒலி எழுப்பி. தேங்காய்ப்பூ போன்ற உதிரித்துளிகளை விட்டெறியும், இப்படி நீரம்மானை ஆடிக்கொண்டிருந்த நெடுங்கடல் மீது வெறும் கட்டைகளையும், காற்றைத் தாங்கிச் சமா ளிக்கவும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும் பயன்படுகிற ஒரு பாய்' துணியையும் துடுப்புகளையும், தங்கள் கை பலத்தையும் நம்பி வேட்டையாடித் திரியும் மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கரை திரும்பும் கட்டு மரங்கள் கடல்பரப்பு நெடுகிலும் அங்குமிங்குமாகச் சிதறி மிதந்தன. கரையிலிருந்து கவனிப்பவர்களுக்கு, துரத்தில் உள்ள மரக்கலங்கள் சிறிதும் பெரிதுமான விசித்திரப் பறவைகள் போல் காட்சி அளித்தன. கரையை நெருங்கியதும் கட்டுமரங்களில் இருந்தவர்கள் பாயை அவிழ்த்துச் சுருட்டிக் கலத்தோடு கட்டிவிட்டு, சாடு கிற அலைகளைச் சமாளிக்கத் துடுப்பு வலித்தும், இழுத்துச் செல்லும் அலையோடு இழுபட்டும் எற்றுகின்ற அலையின் உதவியால் முன்னேறியும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/48&oldid=855560" இலிருந்து மீள்விக்கப்பட்டது