பக்கம்:மனிதர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அன்று கரையோரத்தில் அலைகளின் ஆவேசம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. குதித்தாடுகிறபேரலை கள் சில ஒன்றிரண்டு கட்டு மரங்களைப் பந்தாடிக் கவிழ்த்து விட்டு வெறிமகிழ்வோடு பெருநீரிலே கலந்து புரண்டன. அவ்வேளைகளில் நழுவி, கடலில் விழுந்து விடுகிற மனிதர்கள் நீந்தி, கட்டைகளைப் பற்றிக் கொள்வதுடன் அவற்றைத் திருப்பி மிதக்க விடவும் பாடுபட வேண்டி விருந்தது. கடலின் மடியிலே தவழ்ந்து விளையாடும் அவர் களுக்கு இதுகூடச் சிறு விளையாட்டுதான். . கட்டு மரங்களில் ஒன்று கரையை அணுகிக் கொண் டிருந்தது. அதில் இருந்தவர்கள் இரண்டு பேர். வேகமாக முன்னேறுவதற்காக முழு பலத்தோடும் துடுப்புகளினால் நீரைக் கிழித்து ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். மிடுக்கு மிகுந்த ஒய்யாபோல் முன்வந்து பூவிளிம்புப் பாவாடையைச் சுழற்றி வீசித் தனி நாட்டியம் பயின்று, குறும்புக்காரச் சிறுமி போல் குதித்து ஓடியது பேரலை ஒன்று. திரும்பிச் சென்ற அலை எவ்விப் பொங்கிய அலை ஒன்றோடு மோதியது. ஒலி எழுந்தது. வெண்ஒளித் துளிகள் தெறித்தன. அலையோடு மேலெழுந்தது கட்டுமரம். தாழ்ந்தது. உடனடியாகச சுழன்று கவிழ்ந்துவிட்டது. தண்ணிரில் தள்ளுண்டார்கள் இரண்டுபேரும். நீரில் மூழ்கி எழுந்தார்கள். கைகால்களை அடித்துக் கட்டையை அனுகினார்கள். திமிங்கிலம்போல் மிதந்த கட்டைகளின் தொகுப்பு மீது கை வீசினான் ஒருவன். அதன் மீது படுத்து, இரு கைகளாலும் அதைத் திருப்பிக் கவிழ்த்து நேராக்க முயன்றான். மற்றவனும் ஒரு முனையைப் பற்றின்ான். சற்றே புரண்டது. மரம் உருண்டது. அவர்கள் இருவரும் மீண்டும் நீரில் விழுந்து தத்தளித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/49&oldid=855562" இலிருந்து மீள்விக்கப்பட்டது