பக்கம்:மனிதர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5莎 மிதந்து வாழ முயல்பவன். இப்போதுதானே தனக்குத் துணையாக, தனது பலமே தற்காப்புக் கருவியாகத் திகழ, உயிருக்காகப் போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட் டிருந்தது. ஒவ்வொரு ஜீவனின் இயல்பான உயிரா சை அவனுள்ளும் ரத்தத்தே டு ரத்தமாக ஒடிக் கொண் டிருந்தது; ஒவ்வொரு நரம்பிலும் உறைந்து கிடந்தது. அது அவனுக்கு அசாத்தியமான பலத்தைக் கொடுத்தது. அவன் நீரில் அமிழ்ந்து விடாமலிருக்கப் போராடினான். அவனை அமுக்கிவிட முயல்வன போல் சீறிச் சாடிய அலை களைச் சமாளிக்கும் வேளையிலேயே, அவனது உடலைக் கடித்துக் குதறிவிடும் துடிப்போடு அப்படியும் இப்படியும் புரண்டு தவித்த சுறாமீனின் பிடியிலே சிக்காமலிருக்கவும் போராடிக் கொண்டிருந்தான், நாகன் கட்டுமரத்தை அவனுக்கு மிகவும் சமீபத்தில் கொண்டு வரத் துடிப்பு வலித்தான். வெறிகொண்ட மிருகம் போல் பாய்ந்து வந்த அலை ஒன்று அதை இழுத்துக் கொண்டு கரை நோக்கி முன்னேறியது. முன்னேறி நீந்தக் கைகளை வீசிப் பாய்ந்தான் ஜலேந் திரன். சுறாவின் வாயில் அகப்படாதிருக்கக் கைகளையும் கால்களையும் ஓங்கி ஒங்கி நீரில் அடித்தபடி சுற்றியும் திரும்பியும் முன்னுக்குப் பர்ய்ந்தும் மிதந்தான். தனது பிபியில் அகப்படுவது போலிருப்பினும் சிக்காது ஏய்ப்புக் காட்டிக் காட்டி விலகிவிடுகிற வேட்டைப்பொருள் டையாடுகிற சக்திக்கு ஆங்காரமும் ஆத்திரமும் தருவது இயல்புதானே! சுறாமீனுக்கும் ஆவேசம் ஏற்பட் டதுபோல் தோன்றியது. வெகுண்டு துள்ளி வேகமாகப் பாய்ந்தது அவனை நோக்கி. - துரித கதியிலே முன்னேற முயன்றான் அவன் கரை அதோ வந்து விட்டது. இன்னும் கொஞ்ச தூரம்தான். அவன் நம்பிக்கையோடு நீந்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/52&oldid=855570" இலிருந்து மீள்விக்கப்பட்டது