பக்கம்:மனிதர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5型 நாகன் கூச்சலிட்டும் துடுப்பைத் தண்ணீரில் அறைந்து ஒலியெழுப்பியும் சுறாவை மிரட்டி ஒட்டுவதற்குத் தீவிரமாக முயன்றான். இந்தச் சலசலப்புக் கெல்லாம் அது பயந்து விடுமா என்ன! சுறா ஜலேந்திரனைத் தொட நெருங்கிவிட்டது. ஒரு பாய்க்சல், ஒரே கவ்வு! அவன் கால் போயே போய்விடும். அல்லது அவனே தண்ணிருக்குள் இழுப்புண்டு போனாலும் போகலாம். தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு அதிகத்தெம்புகொடுத்தது.அவன்சடாரென்று திரும்பினான் சுறாவின் மூஞ்சியை நோக்கிக் கையினால் ஒரு குத்து விட்டான். அது சற்றே பின்வாங்கியது. அவன் வேகமாக நீந்திக் கட்டுமரத்தில் தொத்திக் கொண்டான். அவசரம் அவசரமாகக் கலத்தினுள் ஏறிக் குதிக்க முயன்றான். அம்முயற்சியில், வலது கால் மட்டும் பின்தங்கி நீரில் கிடந்தது. அதையும் உள்ளே இழுக்க உயர்த்தினான். அதற்குள் சுறா வேகமாக வந்து வாய்பிளந்து தாக் கியது. நாகன் துடுப்பினால் ஓங்கி அடித்தான். வாலடித்து திரும்பியது அது. அது ஒடிய வழியெல்லாம் புகைச் சுழல்போல் ரத்தம் நீரில் கலந்து கரைந்து கொண்டிருந்தது. கட்டுமரத்தின் அருகில் ரத்தம் நிறையவே படிந்திருந்தது. ஜலேந்திரன் காலை மேலே இழுத்ததும் விஷயம் புரிந்தது. செக்கச்செவேரென்று, ரத்தமும் தசையும் ஒரே கோரத் - தோற்றமாய்க் காட்சியளித்தன. துண்டுபட்டு விடவில்லை. முழங்காலுக்கு பின்பக்கமுள்ள சதைத் திரட்சியைக் கவ்விக் குதந்து எடுத்துச் சென்றிருந்தது சுறா. அந்த இடத்தி லிருந்து ரத்தம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/53&oldid=855572" இலிருந்து மீள்விக்கப்பட்டது