பக்கம்:மனிதர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மனம் செய்யும் வேலை வாழ்க்கை விசித்திரமானது. அது மனிதரை எப்படி எல்லாமோ பாதிக்கிறது. ஒவ் வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதித்து விடுகிறது. சிலர் சில சமயம் அடியோடு மாறிப் போகிறார்கள். இதற்கெல்லாம் மனம் எனும் மாயசக்திதான் அடிப் படைக் காரணம் என்று சொல்லவேண்டும். காத்தமுத்து இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆவான். முரடன் என்று பெயர் வாங்குவதில் அவனுக்குத் தனி மகிழ்ச்சி இருந்தது. சின்ன வயதிலிருந்தே. வீண் வம்புகளை நாள்தோறும் அவன் வளர்த்து வந்தான். இரவில் வெகு நேரம் தெருவில் சுற்றித் திகிவான். அதனால் இராக் காடு வெட்டி என்று பலர் அவனைக் குறிப்பிடுவது வழக்கம். - இருட்டில் எந்த இடத்துக்கும் தனியாகப் போய்வர அஞ்சாதவன் அவன். பூச்சி பொட்டு கிடக்கும். ஒரு வேளையைப் போல இன்னொரு வேளை இருக்காது’ என்று பெரியவர்கள் எச்சரிக்கும் போது, சப்சா! சாப்பிட்டுது போ!' என்றோ, கிழிச்சுது!’ எனவோ, எடுத்தெறிந்து பேகவான். காத்தமுத்து துணிந்த கட்டை. பேய் பிசாசு என்றெல் லாம் சொல்லி அவனை மிரட்டி விடமுடியாது. பேயாவது கீயாவது! நம்மைக் கண்டாலே அதுகள்ளாம் பயந்து பம்மி விடும்!’ என்று கூறி, அட்டகாசமாய் சிரிப்பான் அவன். 4-س-42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/55&oldid=855576" இலிருந்து மீள்விக்கப்பட்டது