பக்கம்:மனிதர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔彝 பஸ் வசதி இல்லாத ஊர். அதிகாலை முகூர்த்தம். அதனால், முந்திய தினம் மாலை நேரத்திலேயே அந்த ஊருக்கு அவர்கள் போய்விட்டார்கள். . இரவில் அவர்கள் தங்கியிருப்பதற்கு ஒரு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. பெரிய கட்டிடம். ஒரு சுவரில் பெரிதாகக் கீறல் காணப்பட்டது. மேல் தளத்தில் காரை உதிர்ந்து, அங்கும் இங்கும் வட்டங்களும் சதுரங்களும் தென்பட்டன. சில இடங்களில் சுண்ணாம்புத் தாள் உதிர்ந்து கொண் டிருந்தது. - கட்டிடத்தின் பழமை பற்றி அவர்கள் பேசிக் கொண் உார்க இன். வயசாயிட்டுது. இருந்தாலும், நல்ல உறுதியான கட்டிடம். இப்போதைக்கு விழாது." எந்தக் கட்டிடமும் திடீர்னு விழுந்து, உள்ளே இருக் கிறவங்களை சாகடிச்சிடாது. முதல்லே பல நாட்களுக்கு தர்மக்கட்டி சிறுசு சிறுசா, பொடிப் பொடியா, உதிர்ந்து கொண்டேயிருக்கும். அப்படி உதிர்ந்து எச்சரிக்கும். அப் புறம் ஒருநாள் தொம்முனு விழுந்திரும்’ என்று ஒருவர் சுவாரஸ்யமாக வர்ணித்தார். காத்தமுத்து சுவர்களையும் மேல்தளத்தையும் முறைத் துப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர் பேச்சுக்களும் அவனுள் வேலை செய்தன. எனினும், அவன் எல்லோர் கூடவும் சேர்ந்துதான் படுத்தான். துரங்கியும் போனான். இரவு கணத்தது. கிராமத்துச் சூழலில் அமைதி கன மாய் கவிந்து தொங்குவது போல் அழுத்தமாக இருந்தது. வெளியே ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று திடீரென பயங் கரமாய் அலறியது. அதைத் தொடர்ந்து இரண்டு பூனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/58&oldid=855583" இலிருந்து மீள்விக்கப்பட்டது