பக்கம்:மனிதர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多證 அகல் விளக்குகளிடையே ஒரு குத்து விளக்குப் போலும், மலர்க் குவியல்கள் மத்தியில் ஒரு ரோஜா போலும் திகழ்ந் தாள் அவள். யார்? நம்ம சீதையா?’ என வியப்புற்றது. அவன் மனம். ஆகா! என்று அதிசயித்தது ரசனை உள்ளம், அவன் முகம் மலர்ந்து தன்னைக் கவனித்து நிற். பதை உணர்ந்ததும் அவளுடைய அகன்ற பெரியவிழிகள் கய லெனப் புரண்டன. மீண்டும் அவன்மீது மோதுவதற்காக. அந்தப் பார்வை தான் அவனை இடர் செய்தது! அவன் உள்ளத்தில் அவள் இடம் பிடித்து விட்டாள். அவள் நின்ற நிலையை, அசைந்த அசைவுகளை, அவளது மோகனப் பார்வையை, முகத்தின் அழகை, விழி கனின் சுடரொளியை அவன் மறக்கவே யில்லை. அதன் பிறகு அவளே ஒரு படையெடுப்பாக விளங்கினாள். அவனை வென்று விட்டாள். அவளைத் தன்னவளாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன். சந்தர்ப்பங்கள் அவனது பார்வைக்கு விருந்தளிந்தன, ஆசையைத் தூண்டி வந்தன. இகை எதுவும் மாறி ஆடும்பெருமாள் பிள்ளைக்குத் தெரியாது. அவர் தமது மூத்த குமாரனுக்கு, பெரும் பணக் காரரான திருமலைக்கொழுந்து பிள்ளையின் மகளை மணம் முடித்து வைக்க முன்வந்தபோதுதான், பையன் பெரிய அதிர்வெடியைத் தூக்கி அவர் எதிர்பாராத விதத் திலே விட்டெறிந்தான். சீதையைத் தான் மணம் புரி வேன்! சீதை இல்லையென்றால் எனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றான்; மா. ஆ. பெருமாள் பிள்ளை போதித்தார். மிரட்டி னார். முடிவாக, தம்மை நம்பியிருக்கும் யுவ யுவதியரின் மகிழ்ச்சியை விடத் தம்முடைய கெளரவம், அந்தஸ்து, பணத்தாசை முதலியனவே முக்கியம் என்று கருதுகிற ஒரு சில பெரியவர்களைப் போலவே திடமாக அறிவித்தார். எலே மகிழம்! இந்தப் பெருமாள் பிள்ளையை உனக்கு தல்லாத் தெரியாது.டா. ஐயாவாள் உன் கண்ணிலே ஒரு செப்புச் சல்லி கூடக் காட்ட மாட்டாக. ஆமா நெரிஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/68&oldid=855602" இலிருந்து மீள்விக்கப்பட்டது