பக்கம்:மனிதர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புன் சிரிப்பு ஒளிப் பூக்கள் போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந் தாள் அகிலாண்ட நாயகி, - கருவரையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற அகிலாண் டநாயகி திருஉருவம், அர்ச்சகரின் பக்தி சிரத்தையான சிங்காரிப்பினால் உயிர் பெற்று இலங்கியது.

சொல்லி வரம் கொடுக்கும் அகிலாண்ட நாயகி: வாய் திறந்து பேசி விடுவாள் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள். கன்னக் கனிந்த அன்னையின் கரிய திரு முகத்தில் அருள் ஒளி சிந்தும் விழிகளும், குமின் சிரிப்பு நெளியும் உதடுகளும் சன்னிதியில் கைகூப்பி நின்ற ராமலிங் கத்தை நோக்கிச் சிரிப்பது போலவே தோன்றின.

ரொம்ப அவசரம். ரொம்ப ரொம்ப அவசரம் உனக்கு இல்லையா? என்று அவள் கேட்டுக் குறும்பாகச் சிரிப்பது போல் ராமலிங்கத்துக்குப் பட்டது, தேவியின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காது பார்த்து நின்ற ராமலிங்கம் அம்மா தாயே, என்னைக் காப்பாற்று” என்று வணங்கி, தன் கன்னங்களில் அடித்துக் கொண்டார். அன்னையின் குறுநகை மேலும் பிரகாசம் பெற்றது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/73&oldid=855609" இலிருந்து மீள்விக்கப்பட்டது