பக்கம்:மனிதர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7嵩 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜங்ஷனுக்குப்போய், எக்ஸ்’ பிரஸ் ரயிலில் பிரயாணம் போகவேண்டும். முக்கிய அலு வல் ஒன்று அவருக்காகக் காத்திருந்தது. "இந்த ஊர் பஸ்ஸை நம்ப முடியாது. எப்ப வரும் எப்போ போய்ச்சேரும் என்று கணக்கே கிடையாது டிரைவர் கண்டக்டர் இஷ்டத்துக்கு வரும், போகும் மணிக்கணக்கில் வராமலே ஒழிஞ்சுபோனாலும் போகும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்று பேரு. ஒன்றரை மணி நேரம், ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பஸ் வருவது தான் வழக்கமாக இருக்கு. அதனாலே வீட்டை விட்டு சீக்கிரமே புறப்படனும், என்று அவர் பரபரப்புக் கொண் டிருந்தார். அவருடைய அவசரத்தை அறியாதவர்களாக வீடுதேடி வந்தார்கள் ராசாப்பிள்ளையும் அவர் மனைவியும். ஊரிலே பெரிய மனிதர். ராமலிங்கத்துக்கு நெருங்கிய உறவும்கூட. தம்பி, இன்று நம்ம குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அகிலாண்டம்மனுக்கு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு பண்ணி யிருக்கிறோம். நீங்க கட்டாயம் வரணும்' என்று வருந்தி அழைத்தார். ராமலிங்கம் தனது பிரயாண ஏற்பாடு பற்றியும், அவசர அவசியம் குறித்தும் எவ்வளவோ சொன்னார் ராசாப்பிள்ளை கேட்பதாக இல்லை.

  • எக்ஸ்பிரசுக்குத் தானே போகணும்? ஏவம்மா எவ் வளவு நேரம் கிடக்கு. கோயிலுக்கு வந்து, அம்பாளை தரி சித்து பூசையில் கலந்து பிரசாதமும் வாங்கிக் கொண்டு போக தாராளமா நேரம் இருக்கும். அம்மன் அருளும் உங்க ளுக்குக் கிடைக்கும்' என்று அவர் சொன்னார். அவர் மனைவியும் வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் மனசை முறிக்க ராமலிங்கம் விரும்பவில்லை. பூஜையில் கலந்து கொள்ள முடியாது; தேவியின் திருவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/75&oldid=855611" இலிருந்து மீள்விக்கப்பட்டது