பக்கம்:மனிதர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அவர்கள் அந்த இடத்தில் கூடியிருக்கவில்லை. சிந்தனை யாளர், வேதாந்தி, தத்துவதரிசி, ஆன்மீகவாதி, இன்டெ லக்சுவல் என்று ஒருவரை ஒருவர் அறிந்து பழகி வந்த அவர்கள் இருளிலே ஒளியைத் தேடுவது; காலவெள்ளத்தில் நிலைபெறும் வழியை நாடுவது என்கிற ஒரே தாகத்தினால் சர்க்கப்பட்டு அங்கே வந்து கூடி இருந்தார்கள். கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளவும், ஒவ்வொருவரது சிந்தனைச் சிற்றொளி சிதறுகிற மின்வெட்டுகளைத் திரட்டி அறிவுப் பேரொளி கண்டு ஆத்மதிபத்தை அணையாது வளர்க்கவும், வாழ்க்கையின் மெய்ப்பொருள் உணர்ந்து, அதைப் பற்றுக் கோடாகக் கொண்டு மண்ணிலே விண் ணகம் அமைக்கவும் அவாவுற்ற உயர்பண்பினருக்கு ஏற்ற மிக அருமையான சூழ்நிலையாக வாய்த்திருந்தது அந்த இடம். அழகான, இனிமையான, குளுமை நிறைந்த, இயற்கை வளம் செறிந்த சூழல்தான். ஜீவநதி நிறைவோடு நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பக்கத்தில். கண்ணெட்டும் துர மெலாம் அது தந்த வளமை பசுமையாய், இனிமை யாய், கண்ணுக்கு விருந்தாய் பரந்து கிடந்தது. நெடுந் தொலைவிலே மலைத்தொடர் கருநீலமாய் காட்சி தந்தது. வானம் நீலமாய் விரிந்து கிடந்தது. மரங்களுக்குக் குறைவே கிடையாது. இயற்கை அமைதியாய் கம்பீரமாய் கொலு விருக்கும் சந்நிதியில் நிற்பதுபோல் ஒரு மனநிறைவும் புனித உணர்வும் ஏற்படும் அந்த சூழ்நிலையில். அவர்கள் தேர்ந்தெடுத்த இடமும் அத்தன்மையானது. வெயில் எங்கும் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் அதன் கொடுமை தாக்க முடியாது அந்த இடத்தில் அடர்ந்த நிழல் சிந்தும் பெரும் மரங்கள் மிகுந்த தோப்பு அது. சதா குளுகுளு என்றிருக்கும். மென்காற்றும் நிழலும் உடலுக்கு இதமும் உணர்வுக்கு சுகமும் தரும் அந்தச் சூழலில் உள்ளம் கிளுகிளுக்கும். உயர் எண்ணங்களிலே சஞ்சரிக்கும் கபாவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/8&oldid=855616" இலிருந்து மீள்விக்கப்பட்டது