பக்கம்:மனிதர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தி வேலி இருட்டி விட்டது. பையப் பையப் பதுங்கி வந்து குபீர் என்று பாய்ந்து விடும் வலிய மிருகம் மாதிரி, கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து திடுமெனத் தனது முழு ஆற்றலோடும் கவிந்து கொண்டது இருள். சூரியன் மேல் வானில் வேகமாக விழுந்து கொண்டிருந்த போதே, அடுத்த அந்தி மயக்கம் நிழல் பரப்பிய வேளை யிலும், மனிதருக்கு அச்சம் எழுப்பும் சூழலாக விளங்கிய அந்த மலைப்பிரதேசம் இப்போது மேலும் பீதியும் கலவர மும் உண்டாக்கியது. மலை அடிவாரத்தை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பத்துபேர், மலை மீதுள்ள சாத்தாவுக்கு விசேஷ பூஜை செய்வதற்காக, மேலே வந்திருந்தார்கள். அவர்கள் சீக்கிரம் உரிய இடத்துக்குப் போய்விட வேண்டும் என்று வேளையோடுதான் கிளம்பினார்கள். மலைப் பாதையில் வேகம் வேகமாக நடந்ததிலும் குறைச்சல் இல்லை. என்றாலும், ஐந்து மைல் தூரம் என்று கணக்கிடப்பட் டிருந்த பாதை, அடுக்கு அடுக்காக அமைந்திருந்த மலைப் பகுதிகளில் ஏறியும் இறங்கியும், வளைந்தும், சுற்றியும், நெளிந்தும் நேராகவும் கிடந்தது. நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே போவது போலிருந்தது. மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும், பாதைகளினூடும், மலையின் ஒர மாகவும், இடுப்பு வரை உயர்ந்து மண்டி வளர்ந்து கிடந்த .புல்களின் மத்தியிலும் பாதை சென்றது. அதில் அவர்கள் மெதுவாகத்தான் நடக்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/81&oldid=855618" இலிருந்து மீள்விக்கப்பட்டது