பக்கம்:மனிதர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,荔置

எப்பவோ வந்து போயிருக்கு. இந்தா பாரு பாதை விலே-லத்தி காஞ்சு கிடக்குது என்றார். அதை முதலில் கண்டவர்.

இதோ இங்கே யானை லத்தி. இது ரொம்பவும் காஞ்சு போனது. யானை ஏழெட்டு நாளைக்கு முன்னாடி வந்திருக்கும்’

இங்கே பச்சையாக் கிடக்கு . நேற்றுப் போட்டதாக இருக்கும்.' -

யானை லத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாதசாரிகளின் பேச்சு, யானை வந்துவிட்டால் எப்படித் தப்பி ஒடுவது என்ற பிரச்னையை தொட்டது. யானையைக் கண்டுவிட்டால் நேராக ஓடக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு ஒடணும். அப்பதான் யானையாலே வேகமாப் பின் தொடர முடியாது என்றார் ஒருவர். மரத்து மேலே ஏறிவிடணும் என்று வேறொருவர் சொன்னார்.

  • பிரயோசனப்படாது. யானை அலக்கா மரத்தைப் பிடுங்கி எறிஞ்சிடும். பள்ளமா இருக்கிற இடத்திலே குதிச்சால் தப்பிப் பிழைக்கலாம்’ என்று இன்னொருவர் கூறினார்.

அதுகூட ஆளைக் காப்பாற்றாது. போன வாரம் பாருங்க. இப்படித்தான் ஒருத்தன் யானையைக் கண்டதும் பள்ளத்திலே குதிச்சான், யானை என்ன பண்ணிச்சி தெரியுமா? சரிவிலே சாய்ந்து சர்ருனு வழுக்கி இறங்கி, அவனை பாறையோடு பாறையாக வச்சுக் குத்தி, நசுக்கி... ஐயோ, பாவம்: அவன் துவையல் ஆயிட்டான்' என்று, கூட இருந்து கண்டு களித்தவர் போல், விண்டுரைத்தார் ஒ அண்ணாச்சி. - -அண்ணாச்சியா பிள்ளே, அப்ப நீங்க எங்கே நின்னு பார்த்துக்கிட்டிருந்தீக? என்று அவரை யாரும் குறுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/83&oldid=855620" இலிருந்து மீள்விக்கப்பட்டது