பக்கம்:மனிதர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恶多 விசாரணை பண்ணவில்லை. அதிகமாகக் குழப்பமும் கலவர மும்தான் அடைந்தார்கள். சரிசரி, வேகமா நடங்க, சாத்தாவுக்கு பொங்கல் போட்டுவிட்டு, நாம இருட்டுறதுக்கு முன்னாடி செங்கல் தேரி பங்களாவுக்குப் போயிடனும், ராத்திரி பங்களாவிலே தங்குறதுதான் நல்லது. பாதுகாப்பா இருக்கும். கதவுகளை சிக்குனு சாத்திக்கிட்டு உள்ளே கம்னு இருக்கலாம். எந்த மிருகமும் நம்மை எதுவும் செய்ய முடியாது’ என்று வழி வகுத்துக் கொடுத்தார் கோஷ்டியின் தலைவர் மாதிரி செய வாற்றி வந்தவர். எந்த உந்துதல் அவர்களைத் தள்ளிச் சென்ற போதி லும், எவ்வளவு வேகமாக அவர்கள் நடந்து முன்னேற. முயன்ற போதிலும், சாத்தா இருந்த மேட்டை அடை வதற்கே பிற்பகல் மணி இரண்டு ஆகிவிட்டது. சாத்தா, இதர தேவதைகள், குதிரை. யானைகள், சப்த கன்னியர் என்று ஏகப்பட்ட சிலைகள் ஒரு மேட்டின் மீது நின்றன. மேட்டை ஒட்டி சமவெளி, புல்தான் புதர்புதராக மண்டிக் இடத்தது. சிற்சில குத்துச் செடிகளும் அங்கங்கே காணப் பட்டன. ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள் எல்லாம் இந்தப் பகுதியில் இல்லை. சுக்கு நாறிப்புல் ஒரு ஆளின் மார்புக்கு வருகிற அளவு ஓங்கி வளர்ந்து அடர்த்தியாகத் தென் பட்டது. நெடுகிலும், அதனுள் காட்டு மிருகங்கள் பதுங்கி வந்தாலோ மறைந்திருந்தாலோ, எவரும் கண்டுகொள்ள இயலாது. *- : சற்று தள்ளி- சுமார் ஒரு பர்லாங் தொலைவில்- சிறு ஆறு சலசலத்து ஒடிக்கொண்டிருந்தது. அதன் கரைகளி லும், புறங்களிலும் மரங்கள் செறிந்து வளர்ந்து நின்றன பெரிய பெரிய கற்களினூடே ஓடுவதனாலும், இடைக் கிடை மேடுகளிலிருந்து பள்ளங்களில் வீழ்வதனாலும் ஆறு தனிரக இசை போன்ற ஒரு ஓசையை ஓயாது ஒலி பரப்பியவாறிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/84&oldid=855621" இலிருந்து மீள்விக்கப்பட்டது