பக்கம்:மனிதர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சாத்தாவுக்கு :வடைமாலை சாற்ற வேண்டும். பூம்பருப்பு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கன், படைக்கவேண்டும். இவற்றை எல்லாம் மலைமீது வந்து. தான் தயாரிக்க வேண்டும். இதற்குத் தேவையான சகல பொருள்களையும் மூட்டைகட்டி ஆட்கள் சுமந்து வருவ து தான் வழக்கம், . முதலாவது பெரிய பூசை” செய்து முடித்த உடனேயே இரண்டாவதாக ஒரு பூஜையும் செய்யவேண் டும். சிறு அளவில். இதற்கு பாயாசமும் சுண்டலும் நிவே திக்கப்படும். - பூஜைகளில் எதைக் குறைத்தாலும், அவசரப்பட்டு எதையாவது செய்யாமல் விட்டு விட்டாலும், சாத்தா கோபித்துக்கொள்வார், ஊர்களுக்கு தீமை விளையும்’ என்று மக்கள் பயப்பட்டார்கள். அதனால், எவ்வளவு நேரம் ஆயினும், இருந்து ஆர அமர சாத்தா ப்ரீதி' செய்வதுதான் பக்தர்களின் நியதியாக அமைந்திருந்தது. இப்போதும் குறைவற பூஜைகளை நடத்தினார்கள். :நெவித்தியங்கள் தயாரிக்கவே மிகுந்த நேரம் ஆயிற்று. அப்புறம் ஆற்றில் குளித்துவிட்டு, நீர் கொண்டுவந்து சிலைகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, தீபாரா தனை பண்ணி...இல்லையா, ஏகப்பட்ட வேலைகள்? அவை முடிந்ததும், பிரசாத விநியோகம், சாப்பாடு, அதன் பிறகு, இரண்டாவது பூஜைக்கு ஆயத்தம்... இப்படிச் சிறுகச் சிறுக நேரம் காலியாயிற்று. இருட்டுறதுக்குள்ளே ரெண்டாவது பூசையை முடிச் கட்டு, செங்கல்தேரி பங்களாவுக்கு போகப் பார்க்கணும்’ என்று ஒவ்வொருவரும் அடிக்கடி சொல்லிக் கொண்டாலும், எல்லோரும் பறந்து பறந்து காரியங்களை கவனித்த போதிலும், பூஜை முடிவதற்குள் இருட்டு வந்துவிட்டது. காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தோடுவது போல் தான் தோன்றியது அவர்களுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/86&oldid=855623" இலிருந்து மீள்விக்கப்பட்டது