பக்கம்:மனிதர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 முள்ள அந்தப் பெரியவர்கள் தங்களைத் தாங்களே வேத காலத்து மகான்கள் என்றும், ஞானவேள்வி புரியும் தற்கால ரிஷிகள் என்றும் கற்பித்து மகிழ்ந்து போனதில் வியப்பு இல்லைதான். வெவ்வேறு ஊர்களில் சிதறிக் கிடந்த அந்த ஞானச் செல்வர் பலரையும் அங்கே குழுமச் செய்து வயிற்றுக்கு உணவும், வாய்க்கு வேலையும், செவிக்கு விருந்தும் ஏராளமாகக் கிடைக்கச் செய்த பெருமை திருவாளர் திருமலையப்பர் அவர்களையே சாரும். அவரை ஜனகர்’ என்றும், மகாஞானி’ என்றும், ஞானச் சுடர்' என்றும் அங்கே கூடிப் பேச்சு மழை பொழிந்த அறிவாளிகள் பாராட் டத் தயங்கவில்லை. திருமலையப்பர் மகாரசிகர், மாபெரும்ஞானி. அறிவின் கருவூலம், ஞானப்பிழம்பு. இவ்வாறெல்லாம் புகழ்ந்தார்கள் பலரும் : அன்றாலின கீழிருந்து அருள் புரிந்த இறைவனின் இன்றைய உருவம் ஐயா அவர்கள் என்றுகூட ஒருவர் சொன்னார். குளிர்தரு நிழலடர்ந்த தோப்பில், மரங்களின் கீழ் இன்டலெக்சுவல்’ களை ஒருங்கு சேர்த்து, ஞானவேட்டையில் ஈடுபடுத்திய அறிவுச் செல்வரின் சொந்த இடம்தான் அது. அக்கிர. மமே அவருக்குச் சொந்தம். பக்கத்தில் பல மைல் தூரம் வரை அவருக்குத் தோப்பும் துரவும் உண்டு, நன் செய் புன்செய் உண்டு; வீடு மனைகள் உண்டு; மக்கள் சுற்றம் உண்டு; இருந்தும் அவர் பற்றற்றவர். எனவேதான் அவர் இருபதாம் நூற்றாண்டு ஜனகர்! ஏதோ அரசாங்க அலுவலில் பெரிய அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் திருமலையப்பர். பதவி பி லிருந்த காலத்தில் அவர் நேரடியாகவும் மறை முக ம :ம் சேர்த்த சொத்துக்கள்தான் இவை எல்லாம். அ ைதப் பற்றி "இன்டலெக்சுவல், கள் ஏன் கவலைப்படவேண்டும்: மு பு தான் முக்கியம்; முடிவை எய்தத் துணை புரியும் வழி ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/9&oldid=855627" இலிருந்து மீள்விக்கப்பட்டது